100 ஆண்டுக்கு பிறகு 3 ராசிகளின் தலைவிதி மாறும்! முக்கோண ராஜயோகத்தால் பண வரவு

Mangal Shukra yuti in Singh 2023: ஜோதிடத்தின்படி, இந்த நேரத்தில் சிம்மத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை உருவாகிறது. சுக்கிரன்-செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம் சிலரின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 10, 2023, 11:19 AM IST
  • கேந்திர திரிகோண ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
  • இந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும்.
  • இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமான பலன்களைத் தரும்
100 ஆண்டுக்கு பிறகு 3 ராசிகளின் தலைவிதி மாறும்! முக்கோண ராஜயோகத்தால் பண வரவு title=

கேந்திர திரிகோண ராஜயோகம் பலன்கள் 2023: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியை விட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மற்றொரு ராசிக்குள் நுழைகிறது. இதனால் கிரகங்களின் கூட்டணி உருவாகி பல வகையான சுப, அசுப யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்கள் மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் செவ்வாய் பெயர்ச்சியாகி சிம்ம ராசியில் நுழைந்து சுக்கிரனும் சிம்மத்தில் இருக்கிறார். இதனால் கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கும் சிம்மத்தில் செவ்வாய் - சுக்கிரன் சேர்க்கை உருவாகியுள்ளது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு, 3 ராசிகளின் பெயர்ச்சி ஜாதகத்தில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது, இது இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான செல்வத்தைப் பெறுவார்கள், முன்னேற்றம் அடைவார்கள். எனவே கேந்திர திரிகோண ராஜயோகம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

கேந்திர திரிகோண ராஜயோகம் 
வேத ஜோதிடத்தின் படி, கேந்திர திரிகோண ராஜயோகம் மிகவும் அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் 1,4,7,10 ஆகிய வீடுகளை கேந்திர ஸ்தானம் என்பர். அதேப் போல் 1,5,9 ஆகிய வீடுகளை திரிகோண ஸ்தானம் என்பர். இந்த வீடுகள் இணைந்து அல்லது உறவைப் பெற்றிருக்கும் போது கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகிறது.

மேலும் படிக்க | குரு நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் வரை இந்த ராசிகள் மீது குரு பார்வை.. குபேர யோகம், அமோகமான வாழ்க்கை

கேந்திர திரிகோண ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் கேந்திர திரிகோண ராஜயோகம் அமைவதால், இந்த ராசிக்காரர்கள் மிகுந்த பலன் அடைவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு திடீரென்று எங்கிருந்தோ பணம் வந்துவிடும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தன் பேச்சின் சக்தியில் வேலை செய்வார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பழைய பிரச்னைகள் தீரும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம் ராசி: துலாம் ராசியில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகுவது இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமான பலன்களைத் தரும். சில பெரிய விஷயங்களில் வெற்றி பெறலாம். உங்கள் ஆளுமை பிரகாசிக்கும். மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். பதவியும் பணமும் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். பணம் பெற புதிய வழிகள் அமையும். ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும். வியாபாரிகளுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கவுள்ளது. இக்காலத்தில் முதலீடு செய்வதால், நல்ல லாபம் கிடைக்கும்.

 

சிம்ம ராசி: சிம்ம ராசியில் கேந்திர திரிகோண ராஜயோகம் அமைவது இந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். சிக்கிய பணத்தை திரும்பிப் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் பெரிய அளவில் சேமிக்க முடியும். குறிப்பாக நேரம் வியாபாரத்திற்கு நல்லது. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் விரிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் தொடர்பான சில நல்ல செய்திகள் வரலாம். புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகங்கள்: இந்த ராசிகள் மகிழ்ச்சி மழையில் நனைவார்கள்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News