ஜூன் 15ஆம் தேதி முதல் ஆடி மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் பல முக்கியமான நோன்பு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சதுர்மாஸ் ஆடி மாதத்தில் இருந்து தொடங்குகிறது, குரு பூர்ணிமாவும் இந்த மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி மாதம் ஜூலை 13 வரை நீடிக்கும். மொத்தத்தில், இந்த மாதம் மதக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானது, ஆனால் இந்த நேரத்தில் ஒரு அசுப யோகம் உருவாகும் என்பதால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஆடி மாதத்தில் 5 புதன் மற்றும் 5 கிரக மாற்றங்கள்
இந்த வருடம் ஆடி மாதத்தில் 5 புதன்கிழமைகள் உள்ளன. இது தவிர 5 கிரக மாற்றங்களும் இந்தக் காலத்தில் நடைபெறுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் மற்றும் 5 புதன்கிழமைகளின் சேர்க்கை சுபமாக கருதப்படவில்லை. இந்த மாதம் சூரியன், வெள்ளி, செவ்வாய், புதன் மற்றும் சனி ஆகிய கிரகங்களின் நிலையில் மாற்றங்கள் இருக்கும். இவற்றில் சில மாற்றங்கள் அச்சுறுத்தலாக இருக்கும். 5 புதன் மற்றும் கிரகங்களின் அசுப நிலை இந்த காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கையிலும் நாட்டிலும் அழிவை ஏற்படுத்தும். சில இடங்களில் இடையூறுகள், தீ வைப்பு மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலை வணிகத்திற்கு நன்றாக இருக்கும் என்றாலும். இக்காலத்தில் வியாபாரம் அமோகமாக நடைபெறுவதுடன் சந்தையும் பிரகாசமாக காணப்படும்.
மேலும் படிக்க | இந்த ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்கள்
புதனின் கோபத்தைத் தவிர்க்க இதை செய்யவும்
புதன் கிரகம் பலரை தொல்லைகள் செய்யலாம். அசுபமான புதனால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட, புதன் கிரகம் தொடர்பான சில பரிகாரங்களை ஆடி மாதத்தில் மேற்கொள்ள வேண்டும்.
* புதன் கிழமைகளில் அசுரர்களை அழிக்கும் விநாயகரை வழிபடவும்.
* புதன் கிழமை பசுவிற்கு பச்சை புல் கொடுக்கவும்.
* புதன் கிரகம் தொடர்பான விஷயங்களை தானம் செய்யுங்கள். புதன்கிழமையன்று திருநங்கைகளுக்கு பச்சை நிற ஆடைகள் அல்லது பச்சை வளையல்களை தானமாக வழங்குவது நல்ல பலன்களைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த 3 ராசிகளின் தலைவிதி மாறவுள்ளது: மகாலட்சுமி யோகத்தால் அடிச்சது ஜாக்பாட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR