WFH - ல் கோடீஸ்வரனான இளைஞர்! சாதித்தது எப்படி?

கொரோனா வைரஸால் வீட்டில் இருந்தபடியே வேலை செய்த ஐரோப்பாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோடீஸ்வரனாகியுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:42 PM IST
  • WFH -ல் கோடீஸ்வரனாகியுள்ளார் ஐரோப்பிய இளைஞர்
  • ஒரே நேரத்தில் 6 விதமான வேலைகளில் ஈடுபட்டதாக தகவல்
WFH - ல் கோடீஸ்வரனான இளைஞர்! சாதித்தது எப்படி? title=

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் கொரோனா வைரஸ், உலக மக்கள் அனைவரையும் வீட்டிற்குள் அடைத்து வைத்தது. இதனால் கடும் பொருளாதார இழப்புகளையும், பணி சுமைகளையும் கோடிக்கணக்கானோர் எதிர்கொண்டுள்ளனர். ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. இது சிலருக்கு அசௌகரியமாக இருந்தாலும், பலரும் வரப்பிரசாதமாக பார்க்கின்றனர். 

மேலும் படிக்க | Snake Vs Rabbit: தன்னை சீண்டிய முயலை பந்தாடிய பாம்பு - வைரல் வீடியோ

இந்நிலையில், ஐரோப்பியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டில் இருந்து வேலை செய்ததன் மூலம் கோடீஸ்வரனாகியுள்ளார். அதாவது, அவர் ஒரேநேரத்தில் 6 இடத்தில் வேலை பார்த்துள்ளார். இதன்மூலம் ஈட்டிய வருவாயில் லட்சணக்கணக்கில் ஊதியம் பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் ரெடிட் இணையதளத்தில் எழுதியுள்ள பதிவில், தான் ஐரோப்பாவை சேர்ந்தவன். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்த கடுமையான காலக்கட்டம் என்பதால், வேறொரு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். 

தொடர் முயற்சியின் காரணமாக எனக்கு 6 வேலைகள் கிடைத்தது. அனைத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்து வருகிறேன். முழுநேரப் பணிகள் என்பதால் சுமார் 700 ஆயிரம் அமெரிக்க டாலர் ( இந்திய ரூபாயில் 5.27 கோடி) ஊதியமாக கிடைத்தது. இதேபோல் தொடர்ந்து உழைத்து 40 வயதுக்குள் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன். என் கனவை நனவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!

இவரின் இந்த பதிவுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. ஒரே நேரத்தில் எப்படி 6 வேலை செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ள சிலர், செய்யும் வேலைக்கு உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளனர். அதேநேரத்தில் அவரின் கடின உழைப்பு மற்றும் முயற்சிக்கு சிலர் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News