எட்டு ஜோடி ஜீன்ஸ் பேன்டை ஒரே நேரத்தில் அணிந்து திருட முயன்ற பெண்: Watch Video

ஒரே நேரத்தில் எட்டு ஜீன்ஸ் பேண்ட்-ஐ அணிந்து திருட முயன்ற பெண் ஒருவர் சிக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!

Last Updated : Nov 24, 2019, 08:18 PM IST
எட்டு ஜோடி ஜீன்ஸ் பேன்டை ஒரே நேரத்தில் அணிந்து திருட முயன்ற பெண்: Watch Video  title=

ஒரே நேரத்தில் எட்டு ஜீன்ஸ் பேண்ட்-ஐ அணிந்து திருட முயன்ற பெண் ஒருவர் சிக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், ஒரே நேரத்தில் எட்டு ஜீன்ஸ் பேண்ட்-ஐ அணிந்து திருட முயன்ற பெண் ஒருவர் சிக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

வெனிசூலாவைச் சேர்ந்த பெண் தான் திருடிய பேண்ட்-ஐ கழற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. ட்ரெயல் பார்ப்பதற்காக எடுத்துச் சென்ற எட்டு ஜீன்ஸ் பேன்ட்களையும் ஒன்றுக்கும் மேல் ஒன்றாக போட்டுக்கொண்டு கடையிலிருந்து வெளியேற முயன்றார். ஆனால், அந்தப் பெண் நடந்து செல்லும் போது சந்தேகம் அடைந்த கடையின் பாதுகாவலர் இதைக் கண்டுபிடித்துள்ளார்.

வீடியோவில், குளியலறையில் வைத்து தான் அணிந்த எட்டு ஜீன்ஸ் பேண்ட்களை அந்தப் பெண் ஒன்று ஒன்றாகக் கழட்டுகிறார். அந்தக் காவலாளி ஜீன்ஸ் பேண்ட் எண்ணிக்கையை வீடியோவாக எடுத்துக்கொண்டே கணக்கிடுகிறார்.

திருட்டுக்காக அந்தப் பெண் கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பது தெரியவில்லை. வீடியோ பதிவு செய்யப்பட்ட வெனிசுலா, தற்போது ஒரு அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டு அமைதியின்மை ஆகியவற்றுடன் மிகை பணவீக்கத்தின் வழியாக செல்கிறது. நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஜீன்ஸ் விற்க முயற்சித்தால் அந்தப் பெண் தனக்குத்தானே வேண்டுமா என்று தெரியவில்லை. 

 

Trending News