நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடும் குதிரை! வைரல் வீடியோ

இந்த வைரல் வீடியோவில் குதிரை ஒன்று ஆனந்தமாக நீச்சல் குளத்தில் நீந்தி மகிழ்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 22, 2022, 05:04 PM IST
  • இந்த வீடியோ பல வித லைக்குகளை பெற்றுள்ளது.
  • குதிரையின் நீச்சல் வீடியோ
  • இணையத்தில் வீடியோ வைரல்
நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடும் குதிரை! வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். 

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. 

மேலும் படிக்க | ‘எனக்கும் வேலை கொடுங்க’: Mercedes-Benz ஆலையில் நுழைந்த சிறுத்தையின் வைரல் வீடியோ 

அதேபோல் இங்கு ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக நாம் மனிதர்கள் நீச்சல் குளத்தில் குளிப்பதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு குதிரை நீச்சல் குளத்தில் குளிப்பதை பார்த்திருக்க முடியாது. ஆம், இங்கு ஒரு பிரவுன் நிற குதிரை மனிதர்கள் போல் நீச்சல் குளத்தில் நீந்தி மகிழ்கிறது. அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ 'நேச்சர்' என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ 4,400 க்கும் மேற்பட்ட லைக்ஸ் பெற்றுள்ளது. குதிரை நீந்தியதை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள், இது ஒரு வித்தியாசமான காட்சி என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

குதிரைகளை பயிற்றுவிக்கும் பயிற்சியாளர் ஒருவர் கோறுகையில், இந்த குதிரைக்கு நீச்சல் பயிற்சி கொடுத்துள்ளார். இதன்மூலம், பெரும்பாலான குதிரைகள் உடற்தகுதி மற்றும் தடகள செயல்திறன் ஆகியவற்றில் ஒரு பரந்த முன்னேற்றத்தைக் காட்டுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ’மாயாவி உலகம்’ மூச்சுவிடும் பூமியின் வைரல் வீடியோ - ஆனால் ஒரு டிவிஸ்ட் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News