வைரல் வீடியோ: உத்தரபிரதேசத்தின் சித்தார்த்நகர் (Siddharth Nagar) மாவட்டத்தில் அடைந்த ஒரு சம்பவம், சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோ (Viral on social media) அந்த மாவட்டத்தின் கல்வித்துறையை அதிர வைத்துள்ளது. இந்த வைரல் வீடியோவில், ஒரு பெண் சிக்ஷிமித்ரா தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்துள்ளார். அதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த சம்பவம் ஏடாவா பகுதியில் அமைதுள்ள ஆரம்பப் பள்ளியில் அரங்கேறியுள்ளது. வீடியோ வைரலானதை (Viral Video) அடுத்து, கல்வித் துறை மற்றும் பொது மக்கள் மனதில், பெண் ஆசிரியர் ஓடி வந்து தலைமை ஆசிரியரை ஏன் செருப்பால் அடித்தார் என்பது தான்.
முழு சம்பத்தைப் பற்றிய தகவலை சேகரித்த போது, ஒவ்வொரு நாளும் பெண் ஆசிரியர் சிக்ஷிமித்ரா துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தினம் தினம் அவமதிப்புகள், சாதி சார்ந்த அவதூறுகள் அவர் மீது பயன்படுத்தப்பட்டன மற்றும் அவரை வேலையில் இருந்து நீக்கப்படும் என்றும் அச்சுறுத்தி உள்ளனர்.
பெண் ஆசிரியரின் கையைப் பிடித்த தலைமை ஆசிரியர்:
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, இதைப்பற்றி கேட்டபோது பெண் ஆசிரியரிடம் கேட்டபோது, அன்று, வழக்கம் போல காலை 9 மணிக்கு பள்ளிக்கு வந்தபிறகு, ஒரு பதிவேட்டை எடுத்து வரும்படி கூறியுள்ளனர். அந்தப் பெண் ஆசிரியர் பதிவேடுடன் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றபோது, பெண் ஆசிரியரின் கையைப் பிடித்த தலைமை ஆசிரியர், நான் உங்களைப் பதிவேட்டில் கையெழுத்திட விடமாட்டேன் எனக் கூறியுள்ளார்.
ALSO READ | குற்ற உணர்ச்சியில் கதறிய யாஷிகா; வெளியான உருக்கமான பதிவு
தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்ததாக பெண் ஆசிரியர்:
அதற்குப் பிறகு தலைமை ஆசிரியர் பதிவேட்டை வீசி, அவரைத் துஷ்பிரயோகம் செய்ததாக அந்தப் பெண் ஆசிரியர் குற்றம் சாட்டினார். துஷ்பிரயோகத்தைக் கேட்டதும், தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்ததாக பெண் ஆசிரியர் கூறினார்.
கல்வி அமைச்சரிடம் புகார்:
அதே நேரத்தில், இந்த விஷயத்தின் புகார் குறித்து, அந்த பெண் ஆசிரியர் பிஎஸ்ஏ மற்றும் கல்வி அமைச்சரிடம் புகார் அளித்ததாக கூறினார்.
அதே நேரத்தில், இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து அறிக்கை அளிக்குமாறு கல்வி அலுவலரிடம் கேட்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில், இதுபோன்ற சம்பவங்கள் இனி கல்வித் துறையிலும் நடக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
ALSO READ | Viral Video: 160 அடி உயரத்தில் டிக்டாக் வீடியோ எடுத்த பெண் கீழே விழுந்து மரணம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR