டெக்னாலஜி வளர்ந்தது இந்த திருடனுக்கு தெரியல போல பாவம்: Video

நகை கடையில் திருடத்தெரியாமல் மாட்டிக்கொண்டு முழித்த திருடனின் வீடியோ இணையத்தில் வைராலகி வருகிறது...

Last Updated : Dec 15, 2018, 03:50 PM IST
டெக்னாலஜி வளர்ந்தது இந்த திருடனுக்கு தெரியல போல பாவம்: Video  title=

நகை கடையில் திருடத்தெரியாமல் மாட்டிக்கொண்டு முழித்த திருடனின் வீடியோ இணையத்தில் வைராலகி வருகிறது...

இந்த பரந்த உலகத்தில் வேடிக்கையான பல விஷயங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் அனைவருக்கும் தெரிவதில்லை. சில நிகழ்வுகள் மட்டும் எப்படியாவது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி அனைவரிடமும் சென்றடைகிறது. 

தற்போதைய காலகட்டத்தில் சிசிடிவி கேமிராவில் மூலம் தான் பல கொள்ளையர்களை காவல் துறையினர் பிடிக்கின்றனர். இது போன்ற ஒரு நகைதிருடனின் நகைச்சுவை வீடியோ வைரலாவதை நாங்கள் கண்டோம். 

அந்த வீடியோவில், தாய்லாந்தை சேர்ந்த திருடன் ஒருவன் நகை கடைக்குள் திருட முயன்றபோது அவனை புத்திசாலிதனமாக பிடித்த கடை உரிமையாளரின் வீடியோ காட்சி சமீபத்தில் இணையத்தில் வைரளாகி வருகிறது. இந்த நிகழ்வு அங்குள்ள பத்திரிக்கையில் வெளியான செய்தியின்படி, இச்சம்பவம் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி மாலை சுமார் 6 மணி அளவில் சோன்பூரியில் உள்ள நகைக்கடையில் நடந்தது.

சுபாச்சாய் பான்தோன்கு என்ற 27 வயதுடைய அந்த நபர் நகைக்கடைக்குள்‌ வந்து தங்க செயினை அணிந்து பார்ப்பது போல் கழுத்தில் மாட்டிக்கொள்கிறார். பின்னர் அவர் நுழைவு வாயிலை நோக்கி ஓடுகிறார். அப்போது அவர் உரிமையாளரால் பூட்டப்பட்ட கதவின் மேல் மோதி விழுந்தான். பிறகு அந்த இளைஞர் மீண்டும் உரிமையாளரிடம் வந்து நகையை கொடுத்த பின்னர் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இணையத்தில் வெளியான இந்த நகைச்சுவையான வீடியோ காட்சி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

 

Trending News