வெள்ளத்தில் அடித்த செல்லப்பட்ட நாயை மீண்டும் சந்தித்த பெண்! உணர்ச்சிகரமான வீடியோ!

பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளத்தில் தனது செல்ல பிராணியை துளைத்த பெண். மீண்டும் இருவரும் சேரும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 20, 2024, 07:50 AM IST
  • பிரேசில் வெள்ளத்தின் போது நாயை பிரிந்த பெண்.
  • செல்ல நாயுடன் மீண்டும் இணையும் வீடியோ.
  • உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரல்.
வெள்ளத்தில் அடித்த செல்லப்பட்ட நாயை மீண்டும் சந்தித்த பெண்! உணர்ச்சிகரமான வீடியோ! title=

பிரேசிலில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தின் போது பிரிந்து சென்ற தனது செல்ல நாயை மீண்டும் சந்தித்த பெண்ணால் அவரது கண்ணீரை அடக்க முடியவில்லை. ஏப்ரல் பிற்பகுதியில் இருந்து பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் பெய்த கனமழை வரலாற்று வெள்ளத்தை ஏற்படுத்தியது. இந்த வெள்ளத்தில் 150க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த வெள்ளம் நூற்றுக்கணக்கான நகரங்களை மூழ்கடித்தது. இதனால் பலர் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்தனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கு மத்தியில் ஒரு இனிமையான செய்தியும் நடந்துள்ளது. ஒரு உணர்ச்சிபூர்வமான வீடியோவில், மீட்புக் குழுவினரால் வழிநடத்தப்பட்ட படகில் ஒரு பெண் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த பெண் முகத்தில் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. அவரது ஏக்கத்திற்கான இந்த வீடியோவில் உள்ளது. 

மேலும் படிக்க - நாயும் குரங்கும் போடும் வேற லெவல் சண்டை: கதிகலங்கிய நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

அதிகாரியின் உதவியுடன் அங்கிருந்த நாய் படகிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் பிறகு நடக்கும் காட்சிகள் நம் கண்களிலும் கண்ணீரை வரவைக்கிறது. அந்த பெண்ணும் அந்த நாய்குட்டியும் பாசத்தை பொழியும் காட்சிகள் நம் கண்களிலும் கண்ணீரை வரவைக்கிறது. உணர்வுபூர்வமான இந்த வீடியோ சமீபத்தில் சமுக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. பிரேசிலில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தின் போது அந்த பெண் தனது வளர்ப்பு நாயை துளைத்துள்ளார். இந்நிலையில், காணாமல் போன தனது நாயுடன் மீண்டும் இணைந்துள்ளார். கடந்த வாரம் தெற்கு பிரேசிலின் மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் பரவலான வெள்ளத்தை ஏற்படுத்திய கனமழையால் நூற்றுக்கணக்கான நகரங்கள் நீரில் மூழ்கின. மீட்பு பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றனர். 

உருகுவே மற்றும் அர்ஜென்டினா எல்லையில் உள்ள ரியோ கிராண்டே டோ சுலில் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்களை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது. மேலும் ஏறக்குறைய 100 குடியிருப்பாளர்கள் இன்னும் காணவில்லை மற்றும் 5,00,000 க்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த வெள்ளத்திற்குப் பிறகு மீண்டும் நகரத்தை கட்டியெழுப்புவதற்கான செலவுகள் ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்ட 19 பில்லியன் ரைஸ் ($3.72 பில்லியன்) விட மிக அதிகமாக இருக்கும் என்று அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

மேலும் படிக்க - ஆசை மகளின் திருமணம்....கதறி அழுத பெற்றோர்: நெகிழ வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News