வைரல் வீடியோ: இவரு பெரிய அறிவாளி.. சேற்றில் அந்தர்பல்டி அடித்த இளைஞர்: செம காமெடி

சைக்கிளிங் சென்ற அனைவரும் சேற்றை பார்த்தவுடன் இறங்கி நடந்து அந்த பகுதியை கடந்து செல்லும்போது, ஒருவர் மட்டும் தன்னை பெரிய அறிவாளி போல் நினைத்துக் கொண்டு சேறிறல் சைக்கிளை வேகமாக விட்டு குப்புற கவிழ்ந்து விழுந்துள்ள வீடியோ வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 26, 2023, 09:59 AM IST
வைரல் வீடியோ: இவரு பெரிய அறிவாளி.. சேற்றில் அந்தர்பல்டி அடித்த இளைஞர்: செம காமெடி  title=

எல்லோர் குழுவிலும் ஒரு அதிகப்பிரசங்கி என்ற நபர் இருப்பார். அவர் மட்டும் எல்லோரும் ஒரு வழியில் செல்லும்போது, தன்னை வித்தியாசமாக காட்டிக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் நேர்மாறான செயல்களில் ஈடுபடுவார். அது ஏற்றுக் கொள்ளும்படியானதாக இருந்தால்கூட பரவாயில்லை, நிச்சயம் இந்த விஷயத்தில் ஏதோ தவறு நிகழும் என்பதை அறிந்தே அத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள் அவர்கள். அப்படியான செயலில் ஒருவர் ஈடுபட்டு வாங்கிக் கட்டிக்கொளும் வீடியோ தான் இப்போது வைரலாகியுள்ளது. டிவிட்டரில் வைரலாகியிருக்கும் வீடியோவில் ஒரு குழுவாக சைக்கிளிங் சென்றுள்ளனர். காட்டுக்குள் அவர் சைக்கிளிங் சென்றதால் ஓர் இடத்தில் பாதையில் சேறும் சகதியுமாக இருக்கிறது. 

மேலும் படிக்க | இணையத்தை அழ வைத்த அம்மா நாய்: உங்களாலும் அழாமல் இருக்க முடியாது!!

உடனே பார்த்த அனைவரும் சேற்று பகுதியை சைக்கிளை தள்ளிக் கொண்டு கடந்துவிடலாம் என நினைத்து இறங்கி வரிசையாக அந்த சேற்றைக் கடக்கின்றனர். ஆனால், ஒரே ஒரு நபர் மட்டும் ஜெட் வேகத்தில் செல்கிறார். எல்லோரும் ஓரமாக செல்ல, சேறு அதிகமாக இருக்கும் பகுதியில் சைக்கிளை வேகமாக விடுகிறார். என்னப்பா இவரு மட்டும் இப்படி வேகமாக போறாரு, நாமளும் போய் இருக்கிறலாமோ? என நினைத்து அனைவரும் பார்க்கும்போது அவருடைய சைக்கிள் சேற்றில் விழுந்து, அந்த இளைஞரும் தலைக்குப்புற கவிழ்கிறார்.

அவர் விழுந்த அடுத்த நொடி அனைவரும் வாய்விட்டு குபீர் என்று சிரிக்கின்றனர். அவர்களால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அந்தளவுக்கு அந்த நபரின் செய்கை இருக்கிறுது. டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோ சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை நெருங்கிவிட்டது. வீடியோவை பார்த்த பலராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. குபீர் என்று சிரிக்கின்றனர். அந்தளவுக்கு காமெடியாக இருக்கும் வீடியோவை நீங்களும் பார்த்தால் சிரிப்பை உங்களாலும் அடக்க முடியாது. 

மேலும் படிக்க | Viral Video: அம்மாடி... என்ன வாய்.... இது பேசும் கிளி இல்லை... அரட்டை அடிக்கும் கிளி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News