’டேய் சாப்பாடு போடுடா’ திருமண பந்தியில் சூரிக்கு டஃப் கொடுத்து சாப்பிட்ட நபரின் வீடியோ

திருமண பந்தியில் சூரிக்கே டஃப் கொடுக்கும் வகையில் நீண்ட நேரம் எழாமல் சாப்பாடு கேட்டு வாங்கும் வீடியோ யூ டியூப்பில் மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 2, 2023, 09:05 PM IST
’டேய் சாப்பாடு போடுடா’ திருமண பந்தியில் சூரிக்கு டஃப் கொடுத்து சாப்பிட்ட நபரின் வீடியோ title=

திருமணத்தில் மணமக்களுக்கு வாழ்த்து சொல்கிறார்களோ இல்லையோ சாப்பாட்டை தேடிச் செல்பவர்கள் தான் அதிகம். அங்கு கிடைக்கும் உபசரிப்பை வைத்தே மண வீட்டாரை காலமெல்லாம் சொல்லி சொல்லி வாழ்த்துவார்கள். இந்த வகையெல்லாம் போட்டு, சமைத்து போட்டு நல்லா கவனிச்சாங்கப்பா என சொல்லுவார்கள். அந்தளவுக்கு திருமணத்தில் பரிமாறப்படும் உணவுக்கு மண வீட்டாரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அங்கு தான் எல்லா விதமான காமெடியும் அரங்கேறும். ஏனென்றால் கடைசி நபர் சாப்பிடும் வரை, முதலில் என்னென்ன வகைகள் வைக்கப்பட்டதோ, அவை அனைத்தும் வைக்க வேண்டும். ஒருவேளை ஏதேனும் இல்லையென்றால் எங்களை நல்லா கவனிக்கவில்லை, எங்களை அசிங்கப்படுத்திட்டாங்க என முகத்துக்கு முன்னாடியே சொல்லியும் காட்டுவிடுவார்கள். இது ஒருவகையில் அவமானமாக கூட மாறும். 

மேலும் படிக்க | Viral Video: மணமேடையில் துப்பாக்கி... சோகத்தில் முடிந்த விளையாட்டு!

பந்தியில் ஏற்பட்ட பிரச்சனையால் திருமணங்கள் நின்றுபோன வரலாறுகூட இருக்கிறது. சாப்பாடு மட்டும் சுவையாக இருந்துவிட்டால் பலமுறை சாப்பிடுவார்கள். சிலர் இரண்டு பந்தி முடிந்த பிறகும்கூட எழாமல் சாப்பிடுவார்கள். அப்படி ஒருவர் திருமணத்தில் அமர்ந்து சாப்பிடும் வீடியோ தான் யூடியூப்பில் வைரலாகியிருக்கிறது. மனுசுன் நீண்ட நேரம் எழாமல் அவர் பாட்டுக்கு சாம்பார் கொண்டுவா... ரசம் கொண்டு வா... என கேட்டு கேட்டு சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். அங்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்த கேமரா மேன், இதென்னாப்பா நீண்டநேரமாக ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என பார்த்து வியந்துபோய் வீடியோவை எடுத்துவிட்டார்.

மனுசுனும் எதற்கும் அசராமல் சாப்பிடுக் கொண்டே இருக்கிறார். அதுவும் சாப்பாட்டை உருண்டை பிடித்து அவர் சாப்பிடும் விதத்தை பார்க்கும்போது பார்ப்பவர்களுக்கே வாயில் நிச்சயம் எச்சில் ஊறும். அந்தளவுக்கு ரசித்து ருசித்து சாப்பிடுகிறார். குழம்பை நன்றாக சாப்பாட்டுடன் பிசைந்து, அதனை உருண்டையாக்கி அப்படியே எடுத்து வாயில் போடுகிறார். சாப்பாடு தான் எல்லோருக்கும் மன நிறைவு கொடுக்கக்கூடிய ஒன்று. பணக்காரர் முதல் ஏழை வரை எல்லோரும் திருப்தி அடையும் ஒரு விஷயம் என்றால் அது சாப்பாடு தான். அதனால் நாள்தோறும் சாப்பிடுவதை ரசித்து ருசித்து சாப்பிடுங்கள் மக்களே..! 

மேலும் படிக்க | ஓடும் ரயிலில் இப்படியா... காதல் ஜோடிகளின் அதிர்ச்சி செயல்: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News