கதவை திறக்க சொல்லி பாகனுடன் சண்டை போடும் யானைகுட்டி!

யானை ஒன்று கட்டைக்கு பெயிண்ட் அடித்துக்கொண்டிருக்கும் பாகனை வேலை செய்யவிடாமல் வம்பு இழுத்து செல்லமாக சண்டைபோடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 13, 2022, 08:11 PM IST
  • கதவை திறக்க சொல்லி சண்டையிடும் யானை.
  • பாகனை வேலை செய்ய விடாமல் தடுத்து சேட்டை.
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ.
கதவை திறக்க சொல்லி பாகனுடன்  சண்டை போடும் யானைகுட்டி! title=

யானைக்கும், யானைபாகனுக்கும் இடையேயான பிணைப்பு அற்புதமான ஒன்றாகும்.  குழந்தையும் தாயும் எப்படி பாசப்பிணைப்போடு இருப்பார்களோ அதே போன்று தான் யானைக்குட்டியும், யானைப்பாகனும் இருப்பார்கள்.  அடிக்கடி இவர்கள் இருவருக்கும் இடையேயான செல்ல சண்டைகள் அதிகம் கவன ஈர்ப்பை பெற்றுவிடுகிறது, ஏற்கனவே யானைக்குட்டி ஒன்று அதன் பெட்டில் யானை பாகன் படுத்து இருப்பதை விரட்ட முயன்ற நகைச்சுவையான காட்சி ஒன்று இணையவாசிகளை வெகுவாக ஈர்த்தது.  அதேபோல தற்போது யானைக்குட்டி செய்யும் சேட்டை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | ஓனருக்கே டிவிஸ்ட் கொடுத்த நாய் - வைரல் வீடியோ

ட்விட்டரில் சம்ரத் கவுடா என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வைரல் வீடியோவானது பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், ஒருவர் கட்டைக்கு பெயிண்ட் அடித்துக்கொண்டு இருக்கின்றார், அவருக்கு பின்னால் உள்ள தடுப்புக்கு வெளியே யானைக்குட்டி ஒன்று நின்றுகொண்டு இருக்கிறது.  அந்த யானை, அந்த நபரை வேலை செய்யவிடாமல் தும்பிக்கையால் அவரது தோள்பட்டையில் தட்டி இடையூறு செய்கிறது.  அவர் எழுந்து மீண்டும் அவரது பணியை செய்கிறார், அந்த யானையும் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பின் மீது கால்களை வைத்து மேலே ஏறிக்கொண்டு மீண்டும் அவரை தொந்தரவு செய்து செல்லமாக சண்டை போடுகிறது.

 

இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை இணையவாசிகளில் பலரும் ரசித்து பார்த்து வருகின்றனர்.  பல இணையாவாசிகள் இந்த வீடியோக்களுக்கு லைக் செய்தும், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

மேலும் படிக்க | விமானத்தில் ஏற அனுமதிக்காததால் பீதியடைந்த பெண் மயக்கம் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News