இந்தியாவில் சுற்றுலாவுக்கு ஆயிரக்கணக்கான இடங்கள் இருக்கின்றன. வட கிழக்கு மாநிலங்கள் முதல் தெற்கே ஜம்மூ காஷ்மீர் வரை, பஞ்சாப் - குஜராத் - தமிழ்நாடு - கேரளா என ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த பூமியின் படைப்புகளின் அதிசயங்களை கண்டுணரலாம். அந்த வரிசையில் மத்திய பிரதேசமும் ஒன்று. அங்கு வரலாற்று இடங்களுக்கு நிகராக வனப்பகுதியின் பேரழகையும் கண்டு ரசிக்கலாம். இதற்காக அம்மாநிலத்துக்கு ஆண்டுதோறும் உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை லட்சங்களை கடக்கிறது. அம்மாநில வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான அரிதான வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க | Viral Video: பாம்பின் கண்களை நோண்டி எடுத்து சித்திரவதை செய்யும் சின்னஞ்சிறு பறவை!
நீங்கள் அந்த விலங்குகளை பார்க்க வேண்டும் என நினைத்தால் அரசு அனுமதியுடன் வனப்பகுதிக்குள் சென்று அந்த விலங்குகளை நீங்கள் கண்டு ரசிக்கலாம். அண்மையில் அப்படி சென்ற சுற்றுலா பயணிகளுக்கு இயற்கையின் வரப்பிரசாதம் கிடைத்துள்ளது. அதுஎன்னவென்றால் அரிய வகை விலங்குகளில் ஒன்றான கருஞ்சிறுத்தை திடீரென சுற்றுலா பயணிகள் சென்ற பாதையில் குறுக்கிட்டுள்ளது. இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த சுற்றுலாப் பயணிகள், சில நிமிடங்கள் திகைத்து போயினர்.
— Pench Tiger Reserve (@PenchMP) August 20, 2022
அந்த சம்பவம் நடந்தது பென்ச் புலிகள் சரணாலயத்தில் தான். பல மாதங்கள் மற்றும் வருடக் கணக்கில் இந்த விலக்கை பார்க்க முயற்சி செய்பவர்களுக்கு மத்தியில், அந்த பயணத்தில் சென்ற சுற்றுலா சென்ற பயணிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வீடியோவில் சில வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிகளுக்குள் சென்றுள்ளனர். ஓர் இடத்தில் மட்டும் அவர்கள் நிறுத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் அவர்கள் சென்ற அந்த பகுதியில் இருக்கும் பாதையைக் கடந்து கருஞ் சிறுத்தை ஒன்று செல்கிறது.
அந்த சிறுத்தையை பார்த்தவுடன் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர். டிவிட்டரில் வெளியிடப்பட்டிருகுகம் இந்த வீடியோ மட்டும் இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றிருக்கிறது. இணையத்தில் இந்த வீடியோவை பார்த்து ரசித்தவர்களும், தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ