Viral Video: பழம் கொடுத்த பெண்ணை பறக்க விட்ட காட்டு யானை - பதறவைக்கும் காட்சி

Viral Video Elephant: கம்பீரமாக நடந்து வந்த காட்டு யானைக்கு ஆசையாக பழம் கொடுக்க சென்ற பெண்ணை அந்த யானை தூக்கி வீசிய வீடியோ காண்போரையும் பதறவைக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 18, 2023, 10:38 AM IST
Viral Video: பழம் கொடுத்த பெண்ணை பறக்க விட்ட காட்டு யானை - பதறவைக்கும் காட்சி title=

காட்டு விலங்குகளிடம் எப்போதும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். அவை அமைதியாக இருக்கிறது என்பதற்காக ஓவர் ரியாக்ஷன் கொடுத்தால், உதை வாங்க வேண்டியது தான். அன்பு செய்கிறோம், அவற்றிடம் பழகுகிறோம் என்ற டையலாக்கு எல்லாம் காட்டு விலங்குகளிடம் செல்லுபடியாகாது. வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போல் நினைத்துக் கொண்டு அவற்றிடம் அசால்டாக செல்லக்கூடாது. பொதுவாக டூர் செல்பவர்களுக்கு இப்படியான எண்ணத்துடன் தான் காட்டு விலங்குகளுக்கு மிக அருகாமையில் சென்று கொஞ்சுவார்கள். என்னையெல்லாம் எதுவும் செய்யவில்லை என பார்த்தியா?.. என கூட இருப்பவர்களையும் கேட்பார்கள். அந்த நேரம் விலங்குக்கு இருக்கும் மன ஓட்டத்தை பொறுத்து அமைதியாக இருந்திருக்கலாம்.

மேலும் படிக்க | பைக் அலாரத்திற்கு நடனமாடும் சிறுவனின் வீடியோ.. ஆனந்த் மஹிந்திரா ரியாகஷன் வைரல்

மற்றபடி எல்லாம் அப்படியிருக்க வாய்ப்பில்லை. ஒருவர் அசால்டாக காட்டு விலங்குகளிடம் சென்று பழம் கொடுத்துவிட்டார், நாமும் அப்படி செய்து பார்க்கலாம் என நினைத்தால் உங்களை காப்பாற்ற யாரும் வர மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு பழம் அல்லது உணவு கொடுப்பதாலேயே காட்டுவிலங்களுக்கு எல்லாம் உங்கள் மீது அன்பு பாசம், பரிவு வந்துவிட்டதாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள். இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவை நீங்கள் பார்த்தால் என்ன சொல்ல வருகிறோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

அந்த வீடியோவில் இளம் பெண் ஒருவர் காட்டு யானைக்கு பழம் கொடுக்க காத்திருக்கிறார். தொலைவில் இருந்து கம்பீரமாக ராட்சத தந்தங்களுடன் ஒரு காட்டு யானை வருகிறது. அருகில் வந்தவுடன், நீண்ட நாள் பழகியதுபோல் காட்டு யானைக்கு பழம் கொடுக்க செல்கிறார். அப்போது அந்த யானை திடீரென முட்டி தூக்கி வீசி விடுகிறது. ஒரு நொடியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவர் பீதியின் உச்சத்துக்கு சென்றுவிட்டார். உடனடியாக ஓடிச் சென்று அந்த காட்டு யானையிடம் இருந்து உதை வாங்கிய பெண்ணை மீட்க ஓடுகிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோவில் இருப்பது தான் காட்டு யானை உள்ளிட்ட விலங்குகளின் குணம். ஜாக்கிரதையாக இருப்பது சுற்றுலா செல்பவர்களின் கடமை. இல்லையென்றால் இப்படியான ஆபத்துகளை கட்டாயம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். 

மேலும் படிக்க | ஸ்கூல் மாணவர்களின் லூட்டிய பாருங்க..இப்படியா செய்றது..வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News