கொள்ளை அழகு ... மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் முயல் - நாய் குட்டி வீடியோ!

முயல் கூட்டத்தின் நடிவில் சிக்கிக் கொண்ட ஒற்றை நாய்குட்டியின் க்யூட் வீடியோ இணையவாசிகளின் இதயத்தை பெரிதும் கவர்ந்து விட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 31, 2023, 02:01 PM IST
  • சிலவற்றை பார்த்தாலே மனதில் சந்தோஷம் தொற்றிக் கொள்ளும்.
  • சுற்றி அம்ர்ந்திருக்கும் முயல் கூட்டங்கள், கோஸை சுவைக்கின்றன.
  • வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
கொள்ளை அழகு ... மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் முயல் - நாய் குட்டி வீடியோ! title=

பொதுவாக நாம் நிறைய வகையான விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றை பார்த்து இருப்போம்.  ஆனால், சிலவற்றை பார்த்தாலே மனதில் சந்தோஷம் தொற்றிக் கொள்ளும். அந்த வகை விலங்குகளில் முக்கியமானவை முயல். அதோடு ஒரு அழகான் நாய் குட்டியும் சேர்ந்தால்... கேட்கவே வேண்டும். அப்படிப்பட்ட அழகான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முயல் கூட்டத்தின் நடிவில் சிக்கிக் கொண்ட ஒற்றை நாய்குட்டியின் க்யூட் வீடியோ இணையவாசிகளின் இதயத்தை பெரிதும் கவர்ந்து விட்டது. இதனை நீங்கள் பார்த்தாலும், உங்கள் மனதில் இருக்கும் டென்ஷன் எல்லாம் விலகி விடும். அதோடு இந்த வீடியோவை மீண்டு மீண்டும் பார்ப்பீர்கள் என்பது உறுதி.

வீடியோவில், நாய்க்குட்டி ஒன்று கோஸ் இலைகளுக்கு நடுவில் அமர்ந்திருப்பதைக் காணலாம். அதனை சுற்றி அம்ர்ந்திருக்கும் முயல் கூட்டங்கள், கோஸை சுவைக்கின்றன. கோஸை சாப்பிடுவது போல் தன்னையும்  முயல் சாப்பிட்டு விடும் என நினைத்ததோ என்னவோ, கோஸ் மீது உட்கார்ந்திருந்த நாய்க் குட்டி பின்னோக்கி சென்று கீழே இறங்குகிறது. இந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. 

வைரலாகும் வீடியொவை கீழே காணலாம்:

 

சமீபத்தில் சில நாட்களுக்கு முன் வைரலான ஒரு வீடியோவில்,  நாய்க்குட்டி மற்றும் பூனைக்குட்டிக்கு இடையிலான நட்பை வெளிப்படுத்தியது. வீடியோவில் நாய்க்குட்டி ஒன்று பூனைக் குட்டி ஒன்றும் அமர்ந்திருப்பதைக் காணலாம். அப்போது என்ன நினைத்ததோ, தன்னை ஆசையாக பார்க்கும் பூனைக் குட்டியை வாஞ்சையுடன் அருகில் வந்து, தடவிக் கொடுக்கிறது. தனது பாதங்களால், பூனை குட்டியின் தலையை நெருடுவது அனைவரையும் மிகவும் கவர்ந்தது.  அந்த வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

மேலும் படிக்க | Viral Video: வாஞ்சையான அந்த ஸ்பரிசம்... சான்ஸே இல்ல... இணையத்தை கலக்கும் வீடியோ!

நிறைய விலங்குகள் வீட்டில் செல்ல பிராணியாகவும் வளர்க்கப்படுகிறது. வீட்டு செல்ல பிராணி என்றால் நாய் மற்றும் பூனை இவை இரண்டும் பெரும்பாலான வீட்டில் வளர்க்கப்படுகிறது என்றாலும், இப்போது நிறைய நபர்கள் வீட்டில் முயலையும் வளர்த்து வருகின்றனர்.  முயல் பார்ப்பதற்கே மிகவும் அழக்காக தோன்றும் பிராணி. முயல் அசைவ உணவுகளையோ அல்லது பிற உயிரினங்களை வேட்டை ஆடியோ சாப்பிடுவதில்லை. காய்கறிகள், பழங்கள் மற்றும் புல்கள் ஆகியவற்றை மட்டும் தான் உணவாக எடுத்துக் கொள்கிறது. பொதுவாக முயல்களின் உணவுதேடும் நேரம் என்றால் அது விடியற்காலை பொழுது தான். ஏனென்றால் அப்போது தான் மிதமான வெளிச்சம் இருக்கும் அந்த நேரத்தில் உணவுகளை தேடினால் மற்ற விலங்குகளிடம் இருந்து தாக்கம் எதுவும் ஏற்படமால் பிழைத்து கொள்ளலாம் என்பது அதனுடைய பழக்கம் ஆகும்.

சமூக ஊடகத்தில் பகிரப்படும் சில வேடிக்கையான, அரிய தருணங்களை காட்டும் வீடியோக்கள் நம் மனதை மிகவும் லேசாக்கி விடும். இணையத்த்தில் வைரலாகும் வீடியோக்கள், சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன.  

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் உறுதி செய்யவோ, பரிந்துரைக்கவோ இல்லை.)

மேலும் படிக்க | திடீர்ன்னு இப்படி செய்யாதடா! ஹார்ட் அட்டாக் வந்திரும்! மியாவ் பூனையை மிரள வைத்த வெளவால்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News