Tiger Video: சுருண்டு கிடக்கும் புலியை சீண்டினால் என்னவாகும்! வைரலாகும் புலிவேட்டை வீடியோ

Tiger Dog Video Viral:  வாழ்வும் சாவும் ஒரு நொடியில் தான் என்பதை உணர்த்தும் வீடியோ இது... சும்மா இருக்கும் புலியை சீண்டினால், என்ன ஆகும்? இந்த வீடியோவை பார்த்தால் தெரிந்துக் கொள்ளலாம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 26, 2023, 11:53 AM IST
  • சும்மா இருக்கும் புலியை சீண்டினால், என்ன ஆகும்?
  • படுத்திருக்கும் புலியை போய் சீண்டி வம்பிழுக்கும் நாய்க் குட்டி
  • விலங்குகளின் வேட்டை வீடியோ வைரல்
Tiger Video: சுருண்டு கிடக்கும் புலியை சீண்டினால் என்னவாகும்! வைரலாகும் புலிவேட்டை வீடியோ title=

புலி வைரல் வீடியோ: நெட்டிசன்களால் தற்போது பார்த்து ரசிக்கப்படும் வீடியோக்களின் பட்டியலில், ‘விலங்குகள்’ வீடியோவுக்கு தனி மவுசு உண்டு. நமது வாழ்க்கையுடன் நீக்கமற கலந்து விட்ட சமூக ஊடகங்கள், நன்மையையும், தீமையையும் ஒன்றாகவே கலந்து கொடுக்கின்றன. தொழில்நுட்பத்தால் இயங்கும் இணையதளங்கள் என்பது நமக்கு மறந்து போகும் அளவுக்கு, இணையமும், தொழில்நுட்பங்களும் நமது வாழ்க்கையை பெரிதும் மாற்றிவிட்டன.

வைரல் வீடியோக்களின் உலகம்

இணையத்தில் வினோதமான விஷயங்களை பற்றி மட்டுமா தெரிந்துகொள்கிறோம்? நாம் அறிய விருப்பப்படும் செய்திகள், அத்தியாவசியமான செய்திகள், காமெடி, சோகம், பயம், அதிசயம், அற்புதம் என அனைத்தையும் இணைய உலகம், பொழுதுபோக்கை வாரி வழங்குகிறது. இணையத்தின் மூலம் உடனுக்குடன் நமக்குக் கிடைக்கும் செய்திகள் மட்டுமல்ல, வீடியோக்களும் உலக நடப்புகளை உடனுக்குடன் வழங்குகின்றன. 

மேலும் படிக்க | பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய பாகிஸ்தான் பெண்... வாயை பிளக்கும் நெட்டிசன்கள்! 

பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் உள்ள சமூக ஊடகங்களில், வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களை பலரும் ரசித்துப் பார்க்கின்றனர். வீடியோக்களில் எதைப் போட்டாலும், அது வைரலாகிவிடும் என்றாலும், விலங்குகளின் சண்டை, காதல், பாசம், நேசம் மட்டுமல்ல, வேட்டையாடும் வீடியோக்களும் வைரலாகின்றன

புலிவேட்டை வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வைரல் வீடியோவில்,படுத்துக் கொண்டிருக்கும் புலியிடம் போய் சீண்டும் நாய், சின்னாபின்னமாகும் காட்சிகள் மனதை கசக்கிப் பிழிகின்றன. அந்த டிரெண்டிங் வீடியோவில், சேற்றில் படுத்திருக்கும் புலியைப் போய் ஏன் சீண்டுவானேன்? உயிரையும் விடுவானேன் என்று பலரும் வருத்தப்படுகின்றார்கள்.

வீடியோவின் தொடக்கத்தில் சாதுவாய் படுத்திருக்கும் புலியிடம் சென்று வாலாட்டும் நாய், என்ன ஆகிறது என்பதை இந்த வீடியோவில், பார்க்கலாம். புலி, எழுந்ததும் நாய்க் குட்டி அதை சாதாரணமாக நினைத்துக் கொண்டு ஓடாமல் நிற்கிறதைப் பார்த்தால், புலியை குறைவாக மதிப்பிட்டு விட்ட நாய் என்ன ஆகிறதோ என்று தோன்றுகிறது.  

சீண்டி சின்னாபின்னமான நாய்

உண்மையில் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், நாய் என்ன செய்திருக்க வேண்டும்? இரையாகாமல், தப்பித்து சென்றிருக்கலாம். ஆனால், சாவகாசமாக நின்ற நாய்க்குட்டியை, ஒரே தாவலில் சென்று ஆடித்து, வாயில் கவ்விச் செல்லும் புலி அதை என்ன செய்திருக்கும்? வேறு என்ன? புலிக்கு வயிறு நிரம்ப உணவு என்றால், பலியான நாய்க்கு?  

மேலும் படிக்க | 'சீக்கிரம்டா..வந்துட போறாரு': ஆப்பிள் திருடும் கில்லாடி குரங்குகள், சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

வேட்டையில் நேரம் காலம் முக்கியம்
வேட்டை என்றால், அதில் முக்கியமானது இயல்பாக செயல்படும் செயல்கள் என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, நமது பலத்தை அறியாமல் சீண்டினால், சின்னாபின்னமாக வேண்டியதுதான் என்று புரிந்துக் கொள்ளலாம். புலியின் இந்த இயல்பான வேட்டை இணையத்தில் இப்போது வைரலாகிறது.   

மேலும் படிக்க | நெல்லிக்காயாய் சிதறும் பாம்புகள்! பார்த்தால் வயிற்றைப் பிரட்டும் பாம்பு வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News