வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு செம வைரலாகும் ‘கைப்புள்ள புலிக்குட்டி’ ! ஏய் நீ புலிடா!

Tiger Compared To Vadivelu Comedy: ஏய் நான் சும்மா விளையாட்டிப் பாத்தேன்ப்பா! கன்னுக்குட்டியிடம் ஜகா வாங்கும் புலிக்குட்டி வீடியோ வைரல்! இதென்ன வடிவேலு காமெடியா இருக்கே என்று தெறிக்கவிடும் நெட்டிசன்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 18, 2023, 12:34 PM IST
  • நம்மைப் பார்த்து பயந்தா அவன் நமக்கு அடிமை... திரும்பினா, நாம அவனுக்கு அடிமை
  • வடிவேலு ஜோக்கை நிஜமாக்கும் புலிக்குட்டி
  • கன்னுக்குட்டியை பார்த்து பயப்படும் புலி வீடியோ வைரல்
வடிவேலு காமெடியுடன் ஒப்பிட்டு செம வைரலாகும் ‘கைப்புள்ள புலிக்குட்டி’ ! ஏய் நீ புலிடா! title=

இன்றைய வைரல் வீடியோ: வடிவேலு காமெடியா இருக்கே என்று தெறிக்கவிடும் நெட்டிசன்களால் தற்போது பார்த்து ரசிக்கப்படும் வீடியோக்களின் பட்டியலில், ‘கைப்புள்ள புலிக்குட்டி’ வீடியோ சேர்ந்துவிட்டது. நமது வாழ்க்கையுடன் நீக்கமற கலந்து விட்ட சமூக ஊடகங்கள், நன்மையையும், தீமையையும் ஒன்றாகவே கலந்து கொடுக்கின்றன. தொழில்நுட்பத்தால் இயங்குவது என்பதே நமக்கு மறந்து போகும் அளவுக்கு, இணையமும், தொழில்நுட்பங்களும் நமது வாழ்க்கையிஐ மாற்றிவிட்டன.

இணையத்தில் வினோதமான விஷயங்களை பற்றி மட்டுமா தெரிந்துகொள்கிறோம்? தேவையில்லாத செய்திகள், அத்தியாவசியமான செய்திகள், காமெடி, சோகம், பயம், அதிசயம், அற்புதம் என அனைத்தையும் இணைய உலகம் வாரி வழங்குகிறது. இணையத்தின் மூலம் உடனுக்குடன் நமக்குக் கிடைக்கும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் உலக நடப்புகளை உடனுக்குடன் வழங்குகின்றன. 

மேலும் படிக்க | WOW Video: தலைகீழாய் நின்று அம்பு விட்டு சாகசம் செய்யும் அழகி வீடியோ வைரல்

பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் உள்ள சமூக ஊடகங்களில்,வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களை பலரும் ரசித்துப் பார்க்கின்றனர்.வீடியோக்களில் எதைப் போட்டாலும், அது வைரலாகிவிடும் என்றாலும், இன்று மிகவும் வித்தியாசமான வீடியோ ஒன்றைப் பார்க்கலாம்.

வடிவேலு காமெடியை நினைவூட்டும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வைரல் வீடியோவில்,வடிவேலுவின் காமெடியை நினைவுப்படுத்தும் ஒரு வீடியோ டிரெண்டிங் ஆகிறது. கன்னுக்குட்டி ஒன்றை துரத்தும் புலி செய்த வேலையைப் பார்த்தால் என்ன சொல்வீர்கள்?

பார்த்த ஐந்தாவது நொடியே சிரிக்க வைக்கும் இந்த வீடியோவில், புலி ஒன்று கன்னுக்குட்டியை துரத்தும்போது, அது ஓட்டப்பந்தய வீடியோவாக தோன்றுகிறது. ஆனால், தலை தெறிக்க ஓடிய கன்னுக்குட்டி வேலி வந்ததும், மேலே ஓட முடியாமல் திகைத்து நிற்கிறது. திகைத்து நிற்பது துரத்திச் சென்ற புலியும் தான்...

உண்மையில் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், ஒரு புலி என்ன செய்திருக்க வேண்டும்? தனது இரையை கைவசப்படுத்தியிருக்கலாம். ஆனால், குட்டிப்புலி ஒரு நொடி தாமதித்தது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கன்னுக்குட்டி ஓடத் தொடங்க, அது தன்னை தாக்கிவிடுமோ என்று பயந்து புலிக் குட்டி ஓடத் தொடங்குவது சிரிப்பாக உள்ளது.

மேலும் படிக்க | 'சீக்கிரம்டா..வந்துட போறாரு': ஆப்பிள் திருடும் கில்லாடி குரங்குகள், சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

வேட்டையில் நேரம் காலம் முக்கியம்
வேட்டை என்றால், அதில் முக்கியமானது நொடிப் பொழுது என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, நகைச்சுவையில் கொடி கட்டிப் பறக்கும் வடிவேலுவின் காமெடியை நினைவுபடுத்துகிறது.

’சிக்கிட்டான் அடிமை’

நம்மைப் பார்த்து பயந்தா அவன் நமக்கு அடிமை... திரும்பினா, நாம அவனுக்கு அடிமை.... வடிவேலு ஜோக்கை நிஜமாக்கும் புலிக்குட்டியின் செய்கை இணையத்தில் இப்போது வைரலாகிறது.   

மேலும் படிக்க | நெல்லிக்காயாய் சிதறும் பாம்புகள்! பார்த்தால் வயிற்றைப் பிரட்டும் பாம்பு வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News