’Final nail in coffin: சவப்பெட்டியில் இறுதி ஆணி அடித்தாகிவிட்டது என்று வாட்ஸ்அப்பை ட்ரோல் செய்கிறது டெலிகிராம். தனியுரிமை புதுப்பித்தல் தொடர்பான புதிய விதிகள் தொடர்பாக இந்த நையாண்டியும் நக்கலுமான பதிவுகள் வெளியாகியுள்ளன.
பேஸ்புக்கின் (Facebook) பிரபலமான செய்தியிடல் செயலியான வாட்ஸ்அப் (Whatsapp) புதிய தனியுரிமை புதுப்பிப்பு அறிவுறுத்தல்கள் தொடர்பாக பெரும் பின்னடைவை எதிர்கொண்டது, புதிய விதிகளின்படி, பேஸ்புக் வாட்ஸ்அப்பின் (Whatsapp) பயனர் தரவை சேகரிக்க அனுமதிக்கப்படும்.
புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு பிப்ரவரி 8 என்பதால் இருப்பதால் கவலைகள் எழுந்துள்ளன. இந்த புதிய கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், மறைகுறியாக்கப்பட்ட குரல் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான (encrypted voice and video calls) அணுகல் துண்டிக்கப்படும்.
Also Read | WhatsApp நண்பர்களை Signal-க்கு எப்படி அழைப்பது தெரியுமா?
எனவே, பாதுகாப்பு அம்சத்தின் அடிப்படையில் பல பயனர்கள், சிக்னல் (Signal) மற்றும் டெலிகிராம் (Telegram) என பிற செயலிகளுக்கு மாறினார்கள். இந்த பின்னணியில் ஒரு சமீபத்திய பதிவில் வாட்ஸ்அப்பை ட்ரோல் செய்துள்ளது டெலிகிராம் செயலி.
ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு GIF இல், ஒரு குழுவினர் சவப்பெட்டியை எடுத்துச் செல்கின்றனர், அதில் வாட்ஸ்அப்பின் தனியுரிமை ஒப்பந்தத்தின் ஸ்கிரீன் கிராப் (screengrab) இருக்கிறது.
— Telegram Messenger (@telegram) January 10, 2021
இந்த பதிவை 2,53,000 மக்களால் 'like' செய்யப்பட்டுள்ளது, சுமார் 80,000 பேர் இதுவரை ரீட்வீட் (retweet) செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு டெலிகிராம் பகிர்ந்த மற்றொரு பதிவில், வாட்ஸ்அப்பும், பேஸ்புக்கும் நையாண்டி செய்யப்பட்டிருந்தன. அதில் Whatsapp-இல் ஒரு குழி தோண்டப்பட்டிருந்தது, அதில் Whatsapp மற்றும் Facebook இரண்டுமே பிரபலமான காமிக் கதாபாத்திரமான ஸ்பைடர்மேன் (Spiderman) உடையணிந்திருந்தன.
— Telegram Messenger (@telegram) January 8, 2021
இதற்கிடையில், 2021 ஆம் ஆண்டின் முதல் ஏழு நாட்களில் வாட்ஸ்அப் செயலி பதிவிறக்கம் செய்வது 11 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சென்சார் டவர் (Sensor Tower) தெரிவித்துள்ளது.
Also Read | உங்கள் நண்பர்களுடன் எப்படி Signalஐ பகிர்ந்து கொள்வது தெரியுமா?
தனியுரிமை தொடர்பாக பல பயனர்கள் கவலையடைந்தபோது, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனர் எலோன் மஸ்க் (Elon Musk) சிக்னல் (Signal) செயலியை ஆதரித்தார். எனவே, அந்த செயலி மிகவும் பிரபலமானது. ஆதரிக்கப்பட்ட பின்னர் வியாழக்கிழமை சிக்னலின் புகழ் மேலும் உயர்ந்தது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR