Zombie Virus Viral Video : கடந்த வராம், ரஷ்யாவில் பெரும் பனிக்கட்டிகளின் அடியில் இருந்து சுமார் 48 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த வைரஸ் தொற்றை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததாக அறிவிதிருந்திருந்தனர். அத்தனை ஆண்டுகளாக பனிக்கடியில் மறைந்திருந்த வைரஸ், 'ஜாம்பி வைரஸ்' என்று பரவலாக அறியப்படுகிறது. இது வெளியே கசிந்தால் கரோனாவை விட மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகின.
இதனால், உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெரிதும் அச்சமடைந்து வந்தனர். கரோனாவின் பாதிப்பில் இருந்தே இன்னும் முழுமையாக மீளாத நிலையில், புதிய ஜாம்பி வெளிய வருமாயின் அது எத்தகைய பாதிப்பை உண்டாக்கும் என்று கவலை தெரிவித்தும் வந்தனர்.
தற்போது, அவர்களின் அச்சத்திற்கு வலுசேர்க்கும் விதமாக 'ஜாம்பி' வைரஸ் தனது வேலையை தொடங்கிவிட்டது என இணையத்தில் சில வீடியோக்கல் பகிரத்தொடங்கி உள்ளன. அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் சிலர் வீதிகளில் ஜாம்பிகள் போல் சுற்றித்திரிந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
This bro is gone pic.twitter.com/Uu4g8c00Ss
— Oyindamola@dammiedammie35) December 6, 2022
வீதிகளில் வினோதமாக சுற்றித்திரியும் அவர்களை நடத்தையைக்கண்டு பலரும் அந்த வீடியோக்களை பகிர்ந்து தங்களின் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வைரலாகி வரும் அந்த வீடியோக்களில் ஒன்றில், பெண் ஒருவர் மெதுவாக தனது வாயை திறந்து நடக்கிறார். மற்றொரு வீடியோவில், ஒரு நபர் நடைபாதையில் அப்படியே நிற்கும் காட்சிகளும் பலருக்கும் பீதியேற்றி வருகிறது.
இந்த வீடியோக்களை ட்விட்டர் பகிர்ந்த ஒருவர், "அமெரிக்காவில் என்ன நடகக்கிறது" என பதிவிட்டிருந்தார். தொடர்ந்து ஒருவர்,"கடந்த வாரம் வெளியான செய்திகளில் கூறப்பட்ட ஜாம்பி வைரஸின் தாக்குதலா இது" எனவும்,"இதுதான் ஜாம்பி வைரஸின் ஆரம்ப கட்ட பாதிப்பா?" என மற்றொருவரும் பதிவிட்டிருந்தனர்.
This is Philadelphia, PA pic.twitter.com/aA0o4uSu5j
— Felix Rends (@FelixRends) October 5, 2021
இந்த வீடியோக்கள் அனைத்தும் அமெரிக்காவில் பதிவானது என கூறப்படும் நிலையல், ஜாம்பி வைரஸோ ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஜாம்பி வைரஸ் தனது பாதிப்பை வெளிப்படுத்த தொடங்கிவிட்டதா என்ற கேள்விகளும் எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில், இது ஜாம்பி வைரஸின் பாதிப்பு அல்ல, போதை பொருள்களால் வந்த பாதிப்பு என சிலர் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
வைரலாகும் அந்த வீடியோக்களில் வரும் அத்தனை பேரும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் அவர்களின் வினோத நடத்தைக்கு காரணம் போதைப் பொருள்களின் கொடூர பின்விளைவுகளே என்றும் தெரிவித்துள்ளனர்.
Come see here bro
When I take drugs I go to the Moon (Yeah, Moon) pic.twitter.com/3WuBgVk4Go
— Big Michael (@MickyLaz) December 6, 2022
இந்த வீடியோவில் காணப்படும் மக்கள் ஜாம்பி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது போதைப் பொருள்களால் பாதிக்கப்பட்டவர்களோ, எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு தற்போது மருத்துவர்களின் தேவை உள்ளது என்பதுதான் நிதர்சனம் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | கொரியன் சீரிஸ் பார்த்ததால் கொடூரம்... 2 சிறுவர்களுக்கு தூக்கு தண்டனை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ