ஆபீஸ் டிராயரில் கூலாக ரெஸ்ட் எடுத்த பாம்பு: செம ஷாக்கில் ஊழியர் - வைரல் வீடியோ

ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் இருந்த மேஜை டிராயரில் பாம்பு ஒன்று படுத்து உறங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 31, 2023, 11:27 PM IST
  • மேஜைக்குள் புகுந்த பாம்பு
  • கூலாக ரெஸ்ட் எடுத்தது
  • நேரில் பார்த்து ஷாக்கான ஊழியர்
ஆபீஸ் டிராயரில் கூலாக ரெஸ்ட் எடுத்த பாம்பு: செம ஷாக்கில் ஊழியர் - வைரல் வீடியோ title=

பாம்பு புகுதா இடமே இல்லை என்று சொல்லம் அளவுக்கு அவை இருக்கும் இடத்தை பார்க்கும்போது தான் புலப்படுகிறது. நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப பாம்புகளும் தங்களின் இருப்பிடங்களை மாற்றி அமைத்துக் கொள்கின்றன. ஆனால் இந்த வீடியோவில் இருக்கும் பாம்பு கொஞ்சம் அட்வான்ஸாக தான் போய் இருக்கிறது. அடுக்குமாடி வணிகவளாகத்தில், ஏசி எப்போதும் இருக்கும் இடத்தில் எப்படியோ நுழைந்து அங்கிருக்கும் மேஜை ஒன்றின் டிராயரில் புகுந்து படுத்துள்ளது. இதனை டிராயரை துறந்து பார்த்தபோது தான் ஊழியருக்கே அதிர்ச்சியாக இருந்துள்ளது.

மேலும் படிக்க | எருமைகள் மீது நாயின் சூப்பர் சவாரி.. சொக்கிப்போன நெட்டிசன்ஸ்: வேற லெவல் வைரல் விடியோ

நீங்களே கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், உங்கள் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்குப் புறப்படும்போது, ​​​​உங்கள் மேசை டிராயரைத் திறந்து அதில் ஒரு பாம்பு தூங்குவதைக் கண்டால் உங்களின் மனநிலை என்னவாக இருக்கும். கேட்கவே பயமாக இருக்கிறது அல்லவா? அப்படி தான் அந்த ஊழியருக்கும் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக காவலாளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து பாம்பை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தைப் பற்றிய வீடியோ யூடியூப்பில் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பேஸ்புக்கிலும் பகிரப்பட்டிருக்கும் அந்த வீடியோ கேப்சனில், ” ஒரு உள்ளூர் வணிக வளாகத்தின் மேலாளர் நாள் முழுவதும் வேலை செய்து கொண்டிருந்தார், பணிநேரம் முடிந்தவுடன், அவர் தனது டிராவைத் திறக்க நேர்ந்தது மற்றும் உள்ளே பாம்பு இருப்பதைக் கண்டதும் அவர் அதிர்ந்து போனார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரன்னிங்கில் இறங்கி மாஸ் காட்டும் நாய்: மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News