மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் அமைதி அஞ்சலி நேரத்தில் வன்முறை!!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த ஜூலை 27 ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை ஏற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி இன்று அரசு விடுமுறை என்றும், அடுத்த 7 நாட்களுக்கு அதாவது ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை ராஜாஜி அரங்கில், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியூர்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் சென்னை நோக்கி வந்து கொண்டுள்ளனர். ராஜாஜி அரங்கில் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார் லேசான தடியடி நடத்தி கூடடத்தை கலைத்தனர். கூட்ட நெரிசல் காரணமாக தொண்டர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
#Watch: Scuffle between breaks out between Police & crowd gathered at #RajajiHall, police resort to lathi charge. #Karunandhi pic.twitter.com/jBjKdfrNzK
— ANI (@ANI) August 8, 2018
இந்நிலையில், திமுக தொண்டர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்... இட ஒதுக்கீட்டிற்காக போராடிய கருணாநிதி, இறந்த பிறகும் இட ஒதுக்கீட்டிற்காக போராடி வென்றுள்ளார். தற்போது இங்கு வந்துள்ளவர்கள் அமைதியாக கலைந்து செல்ல வேண்டும். அனைவரது கால்களை தொட்டுக் கேட்டுக்கொள்கிறேன்" என வலியுறுத்தியுள்ளார்.