பீட்சா டெலிவரி பெண்ணுக்கு தர்ம அடி, 4 பெண் ரவுடிகளின் வீடியோ வைரல்

Woman Viral Video: முறைத்து பார்த்ததாக கூறி பீட்சா டெலிவிரி பெண்ணை நான்கு பெண் ரவுடிகள் அடித்து துன்புறுத்தும் வீடியோ இணையத்தில வேகமாக பரவி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 14, 2022, 08:52 AM IST
  • சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ
  • பீட்சா டெலிவரி பெண்ணை தாக்கிய 4 பெண்கள்
  • இந்த வீடியோ இணையத்தில் வைரல்
பீட்சா டெலிவரி பெண்ணுக்கு தர்ம அடி, 4 பெண் ரவுடிகளின் வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

மேலும் படிக்க | கழுகிடம் சிக்கி பாடாய்படும் பாம்பு தப்பித்ததா: வைரல் வீடியோ

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் அந்த நேரத்தில் உதவிக்காக மக்களிடம் கெஞ்சினார், ஆனால் யாரும் அவருக்கு உதவவில்லை. இதில் சோகமான விஷயம் என்னவென்றால், 4 பெண்கள் சேர்ந்து அவரை தாக்கம் போது அங்கிருந்த யாரும் உதவ முன்வரவில்லை என்பது தான்.

சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவில், 4 பெண்கள் ஒன்று சேர்ந்து பீட்சா டெலிவரி பெண்ணை கடுமையாக தாக்குவது போல் தெரிகிறது. ஒரு பெண் தன் கையில் ஒரு குச்சியையும் வைத்திருக்கிறாள், அதன் மூலம் அந்தப் பெண்ணை அடிக்கிறாள். இந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் அலறி துடித்து அழுவதையும் நாம் காண முடிகிறது. மேலும் அந்த பெண்ணின் முடியை இழுத்து தள்ளி சாலையில் வீசியுள்ளனர். இறுதியாக எப்படியோ எழுந்து இந்த நான்கு பெண்களிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் ஒரு வீட்டை நோக்கி ஓடுவதையும் நாம் இந்த வீடியோவில் காண முடிகிறது.

 

 

இதற்கிடையில் தாக்கப்பட்ட பெண் பீட்சா டெலிவரி செய்பவராக வேலை செய்வதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தங்களை முறைத்து கொண்டிருந்ததாகவும், பின்னர் தன்னைத் தாக்கியதாகவும் நான்கு சிறுமிகள் குற்றம் சாட்டினர். மேலும் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி வேகமாக பரவிய நிலையில் வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | இவருக்கு வந்த சோதனைய பாருங்க: காண்டான கங்காரு, வைரலான வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News