ராஜமௌலி-ன் அடுத்த படம் படப்பிடிப்பு தொடங்கியது!

பாகுபலி படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி அடுத்ததாக இயக்கவிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படத்தின் படப்பிடிப்பை நடிகர் சிரஞ்சீவி தொடங்கி வைத்தார். 

Last Updated : Nov 12, 2018, 02:26 PM IST
ராஜமௌலி-ன் அடுத்த படம் படப்பிடிப்பு தொடங்கியது! title=

பாகுபலி படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி அடுத்ததாக இயக்கவிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படத்தின் படப்பிடிப்பை நடிகர் சிரஞ்சீவி தொடங்கி வைத்தார். 

இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் தேஜா ஆகிய இருவரும் நாயகர்களாக நடிக்க, இப்படத்தை, டி.வி.வி.தனய்யா தயாரிக்கிறார். 

ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்திற்கு ராஜமெளலி, ராமா ராவ், ராம் சரண் என மூவரின் பெயருமே ‘ஆர்’ என்ற எழுத்தில் தொடங்குவதால், 'ஆர்ஆர்ஆர்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் நேற்று தொடங்கியது. மேலும் பூஜையில் நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டு, கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

Trending News