ருசியான டிபன் கிடைச்சிருக்கு விட முடியுமா? நரியை முழுங்கிய மலைப்பாம்பு வீடியோ வைரல்

ருசியான டிபன் கிடைச்சிருக்கு என நினைத்து பெரிய நரி ஒன்றை ராட்சத மலைப்பாம்பு விழுங்கிய வீடியோ வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 15, 2023, 10:54 PM IST
  • நரியை விழுங்கிய மலைப்பாம்பு
  • கேரளாவில் நடந்த சம்பவம்
  • நேரில் பார்த்த மக்கள் அதிர்ச்சி
ருசியான டிபன் கிடைச்சிருக்கு விட முடியுமா? நரியை முழுங்கிய மலைப்பாம்பு வீடியோ வைரல் title=

மலைப்பாம்புகள் என்றாலே, பொதுமக்கள் இடையே ஒரு மலைப்பு இருப்பது சாதாரணம் தான். காரணம் என்னவென்றால், இந்த வகையான பாம்புகளிடம் விஷம் இல்லையென்றாலும், தனது உடும்பு பிடியை வைத்து, இரையை வேட்டையாடி உண்ணும் பழக்கம் உடையது. இவ்வாறு உள்ள இந்த மலைப்பாம்புகள், சில சமயங்களில் பெரிய முதலைகளையே கூட விழுங்கும் திறன் உடையவையாக இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், சில அபூர்வ ரக மலைப்பாம்புகள், வளர்ந்த மனிதனையே விழுங்கும் சக்தி கொண்டவையாக உள்ளன.

மேலும் படிக்க | குட்டி குரங்குக்கு தாயான பூனையின் கியூட் வீடியோ வைரல்

யடியூப்களில் தேடிப் பார்த்தால் மலைப்பாம்புகள் வேட்டை வீடியோ மட்டும் ஆயிரக்கணக்கில் இருக்கும். அசந்து இருக்கும்போது எந்த விலங்காக இருந்தாலும் வேட்டையாட தயங்காது மலைப்பாம்புகள். பெரிய மான் முதல் முதலை வரை அவை வேட்டையாடி இருக்கின்றன. சில நேரங்களில் விழுங்கி விடும். அதன்பிறகு செரிமானம் ஆகாமல் அந்த பாம்புகள் இறந்த நிகழ்வுகள் கூட இருக்கின்றன. மான், நாய் உள்ளிட்டவைகளை மலைப்பாம்புகள் இயல்பாக முழுங்கிவிடும். அளவில் பெரியது என்றால் மட்டுமே கொஞ்சம் சிரமப்படும். மற்றபடி தன்னுடைய வேட்டையில் இருந்தெல்லாம் விட்டுச் செல்லாது. 

இதேபோல் கேரளாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு நரியை விழுங்கியிருக்கிறது மலைப்பாம்பு. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே தாமரசேரியில் உள்ள கூடதை பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை நேரில் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, அப்பகுதியில் உள்ள வனப்பகுதி ஒன்றில், நரி ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. அப்போது, அங்கு வந்த ராட்சத மலைப்பாம்பு, அந்த நரியை பிடித்து, உடலை இறுக்கி, விழுங்கியுள்ளது. இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பார்க்கும்போது, ஒவ்வொரு நொடியும், மிகவும் த்ரில்லாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | விபத்தில் சிக்கியவர் ஆடியன்ஸாக மாறிய விநோதம்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News