புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்போதும் தலைப்பு செய்திகளில் இடம் பெறுவது வழக்கம். ஆனால் இப்போது அவர் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்ற முக்கியக் காரணம், அவரது அரசியல் பேச்சு அல்ல, அவரது ஒரு புகைப்படம் காரணமாக அமைந்துள்ளது. இந்த படத்தில், அவர் ஒரு அரசியல் தலைவரைப் போல் அல்ல, ஒரு மல்யுத்த வீரனாக இருக்கிறார்.
அமெரிக்கா ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப், தனது பல்லாயிரக்கணக்கான ட்விட்டர் பின்தொடர்பவர்களிடமிருந்து எதிர்மறையான கருத்துகளை பெற்றுள்ளார். அவர் ஹாலிவுட் படமான "ராக்கி" திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் ராக்கி பால்போவாவை போல, அவரது உடலில் தனது தலையை வைத்து மிகைப்படுத்தப்பட்ட ஒரு நேற்று (புதன்கிழமை) படத்தை வெளியிட்டுள்ளார். இந்த படத்தை டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் கணக்கை தவிர வேறு எங்கும் பகிர்ந்து கொள்ளவில்லை.
— Donald J. Trump (@realDonaldTrump) November 27, 2019
இந்த புகைப்படம் 178,800 முறை மறு ட்வீட் செய்யப்பட்டது மற்றும் தற்போது வரை, இந்த படம் கிட்டத்தட்ட 614,000 லைக்குகளைப் பெற்றுள்ளது. ஏனெனில் பின்தொடர்பவர்களில் பலர் அவரது சொந்த புகைப்படத்துக்கு மீம்ஸுடனும் பதிலளித்தனர்.
இந்த புகைப்படத்தின் தலைப்பில் டிரம்ப் எதுவும் எழுதவில்லை. அதே நேரத்தில், இந்த படம் 'ராக்கி நான்காம்' பாகம் படத்தின் 34 வது ஆண்டு விழாவில் பகிரப்பட்டது. இந்தப் படம் வைரலாகி விட்டது. "வெள்ளை மாளிகையில் ஒரு போராளி" இருப்பதாகக் கூறி ஆதரவாளர்கள் ட்ரம்பை ஆதரவு செய்திகளால் உற்சாகப்படுத்தினர், மேலும் "எங்கள் சாம்பியன்" என நன்றி தெரிவித்துள்ளனர் ட்விட்டர் வாசிகள்.