இதனையடுத்து கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ரஜினி மும்முரமாக செயல்பட்டு வருகிறார். பிரத்யேக இணையதளத்தையும் ரஜினி தொடங்கியுள்ளார். தமிழ்நாட்டில் நல்ல ஒரு அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகிய இரண்டையும் www.rajinimadram.org என்ற வலைதளபக்கத்தில் பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சினிமா துறையில் அவரது தீவர ரசிகனாக இருக்கும் நடிகர் ராகவா லாரன்சும் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார். அதேநேரத்தில் அவர் அரசியலுக்கு வருவாறா என்ற கேள்விக்கு தான் 10 வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டதாகவும், அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்கள்.
நான் அரசியலுக்கு வராமலேயே நல்லது செய்கிறேன். மேலும் தனக்கு அரசியல் ஆசை இல்லை என்றும் தெரிவித்திருந்தார். ரஜினி இல்லையேல் நானில்லை என்றார். அரசியல் பிரவேசம் குறித்து லாரன் அரசியலில் ரஜினியின் தீவர தொண்டனாக, ஒரு காவலனாக தான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.
ஆவடியில் எனது தாய்க்கு கட்டிய கோவிலில் இருந்து வருகிற 4-ஆம் தேதி ரஜினியின் காவலனாக எனது பயணத்தை தொடங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். எனவே வருகிற 4-ஆம் தேதி லாரன்ஸ் தனது அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.