கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் டிஜிட்டல் உலகம் பன்மடங்களாக வளர்ந்து, விரிந்து விட்டது. கடிதங்களில் வார்த்தைகளை பரிமாறி வந்த நாம், இன்று நொடிப்பொழுதில் வார்தைகளை வாட்ஸ்-ஆப் மூலம் பரிமாற ஆரம்பித்து விட்டோம். இணையதளத்தில் வளர்ச்சி, கொரோனாவிற்கு பிறகு பன்மடங்காக உயர்ந்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.
இணையத்தில் இருக்கும் ஒரு டெக்னாலஜி மேஜிக் என்னவென்றால், உலகின் இரு மூலைகளில் இருந்தும் ஒருவர் இன்னொருவரை கண் இமைக்கும் நேரத்தில் தொடர்பு கொள்ள இயலும். அந்த அளவிற்கு அனைத்தும் வளர்ந்து விட்டது. பல சமயங்களில் நமக்கு தேவையற்ற விஷயங்கள் கண் முன்னே வீடியாேவாக வந்து நின்றாலும், ஒரு சில வீடியோக்கள் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. அதிலும் குறிப்பாக குழந்தைகள் சேட்டை செய்யும் மற்றும் மழலை மொழியில் கொஞ்சிப்பேசும் வீடியோ பார்ப்பதற்கே கொள்ளை அழகாக இருக்கும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்றினை நாம் இங்கு பார்ப்போம்.
வைரல் வீடியோ:
தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு குழந்தையை அதன் தந்தையும் தாயும் தங்களுக்கு இடையே பிடித்துக்கொண்டிருக்கின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டு முத்தம் கொடுத்துக்கொள்கின்றனர். இதை பார்க்கும் குழந்தை அவ்வளவு அழகாக சிரிக்கிறது.
I love seeing mom and dad happy pic.twitter.com/eTigSQTFPA
— (@Enezator) October 10, 2024
தனது தந்தையும் தாயும் அன்பை பரிமாறிக்கொள்கின்றனர் என்பதை கண்கள் முழுவதும் ஆச்சரியத்துடன் பார்க்கும் அக்குழந்தையின் ரியாக்ஷன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை, காதலர்கள் அல்லது கணவன்-மனைவி கூட ஒருவர் மீது ஒருவர் பொது வெளியில் பாசத்தை காண்பிக்க முடியாது. அப்படி செய்தால், இங்கு பலர் “கலாச்சார சீர்கேடு” என்று கட்டையை தூக்கிக்கொண்டு அடிக்க வந்து விடுவர். எனவே, இது போல குழந்தை எதிரில பெற்றோர்கள் முத்தம் கொடுத்துக்கொள்வது வெளிநாட்டில் நடக்குமே அன்றி, இன்னும் சில காலத்திற்கு இந்தியாவில் நடக்காது.
மேலும் படிக்க | இவ்ளோ பெரிய வாழைப்பழமா..! வாய் பிளக்கும் நெட்டிசன்கள்..வைரல் வீடியோ..
மேலும் படிக்க | அப்போ இது சண்டையில்லையா? நெட்டிசன்களை குழப்பிய நாகப்பாம்புகள்: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ