வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் குழந்தைகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
சமூக ஊடகங்களில் குழந்தைகளின் பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவற்றில் பல வேடிக்கையாகவும், பல நமக்கு பாடம் புகட்டும் வகையிலும் இருக்கின்றன. நாம் எங்கும் காண முடியாத பல வினோதமான வீடியோக்களை நாம் இணையத்தில் காண்கிறோம். இவற்றில் சில நம் இதயங்களை விட்டு நீண்ட நாட்களுக்கு நீங்காமல் இருக்கின்றன. இப்படிப்பட்ட வீடியோக்கள் விரைவில் வைரலும் ஆகின்றன.
சமீபத்திலும் அப்படி ஒரு வித்தியாசமான வீடியோ இணையத்தில் பகிரப்ப்பட்டுள்ளது. ஒரு பெண் மேக்அப் அதாவது ஒப்பனை செய்துகொண்ட பிறகு, அவரது குழந்தையால் அவரை அடையாளம் காண முடியவில்லை என்பதை வீடியோவில் காண முடிகின்றது. தனது தாயின் உருவம் மாறியதைக் கண்டு அந்த சிறுவன் அவரை அடையாளம் காண மறுத்து விடுகிறான். சிறு குழந்தையின் அப்பாவித்தனமான ரியாக்ஷனை இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேக்அப் போட்ட அம்மாவை அடையாளம் காண மறுத்த சிறுவன்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு பியூட்டி பார்லரில் சிறு குழந்தை மிகவும் கலவரத்துடன் காணப்படுகிறது. அக்குழந்தை இங்கும் அங்கும் போய் தனது தாயை தேடுகிறது. அவரது தாய் அந்த பியூட்டி பார்லரில் மேக்அப் செய்துகொள்ள வந்துள்ளார். குழந்தை அழுவதை பார்த்த தாய் குழந்தையின் அருகில் வருகிறார். ஆனால், முழு மேக்அப்பில் இருந்த தாயை குழந்தையால் அடையாளம் காண முடியவில்லை.
பியூட்டி பார்லர் நடத்தும் நபர் குழந்தையின் தாயை காட்டி, குழந்தையிடம், ‘இவர்தான் உன் தாய்’ என கூறுகிறார். ஆனால், மேக்அப்புடன் வந்த தாயை அடையாளம் காண குழந்தை மறுத்துவிடுகிறது. குழந்தை மீண்டும் அழுதுகொண்டே தனது தாயை தேட ஆரம்பிக்கின்றது.
மேலும் படிக்க | திருமணத்தில் மூட்டை மூட்டையாய் பணத்தைக் கொட்டிய தங்கச்சி செண்டிமெண்ட் வீடியோ வைரல்
அங்கு இருக்கும் பலர் குழந்தையிடம், ‘உன் அம்மா மேக்அப் செய்து கொண்டிருக்கிறார். அதனால்தான் உனக்கு அவரை தெரியவிலை. இவர்தான் உன் அம்மா’ என பல விதங்களில் கூறுகிறார்கள். ஆனால், குழந்தை இதை ஏற்க மறுத்து தொடர்ந்து தன் தாயை தேடுகிறது.
பின் அந்த பெண் தன் குழந்தையை தூக்கிக்கொள்கிறார். ஆனாலும், அப்போதும் அந்த குழந்தையால் அவரை அடையாளம் காண முடியவில்லை. ஒருபுறம் குழந்தையை பார்த்தால் மிகவும் பாவமாக உள்ளது.
மிக வினோதமான அந்த வீடியோவை இங்கே காணலாம்:
पार्लर वालों से निवेदन है कि बस इतना ही मेकअप करें कि बच्चे पहचान सके pic.twitter.com/kKPapUzBWE
— Hasna Zaroori Hai (@HasnaZarooriHai) June 6, 2023
வீடியோ இணையத்தில் வைரல் ஆனது:
இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @HasnaZarooriHai என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
‘இப்படிப்பட்ட பரிதாபங்களை தவிர்க்க பியூட்டி பார்லர் நடத்துபவர்கள் மிக அதிகமாக ஒப்பனை போடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘அந்த குழந்தையை பார்த்தால் மிக பாவமாக உள்ளது’ என மற்றொரு பயனர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | என்னவொரு வேகம்.. பயங்கரமாக மரம் ஏறும் மலைப்பாம்பு: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ