நார்வே நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் இந்தியாவில் முடி வெட்டுவதற்கு 28000 கொடுத்துள்ளார். இந்த சம்பவமானது பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
நார்வே நாட்டில் பிரபல யூடுயூப் சேனல் ஒன்றின் உரிமையாளர் தான் ஹரால்ட். இவருக்கு கோடி கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவர் கடந்த வாரம் அகமதாபாத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது முடி வெட்டுவதற்காக ஒரு தெருவோரம் இருக்கும் சிறிய கடைக்குள் செல்லுகிறார். அந்த கடைக்காரரிடம் வீடியோ எடுக்க அனுமதி பெற்று பேச்சு கொடுத்து கொண்டே முடிவெட்டி கொண்டார்.
பொதுவாக ரோட்டு ஓரத்தில் இப்படி முடிவெட்டும் கடை வைத்திருப்பவர்கள் 20 முதல் 50 ரூபாய் வரைதான் வாங்குவார்கள். வெளிநாட்டுப் பயணிகள் வந்தால் மட்டும் 100 முதல் 200 ரூபாய் கேட்பார்கள். முடி ட்ரிம் செய்த அந்த நபர் வெறும் 20 ரூபாய் மட்டுமே கேட்டுள்ளார். இவரது நேர்மையைப் பார்த்த ஹரால்ட், பெரும் ஆச்சர்யத்திற்கு உள்ளானார்.
அவரை பார்க்கும் ஹரால்ட் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் 100 ரூபாய் வேண்டும் என்று கேட்டிருப்பார்கள். இது எனக்கே அதிர்ச்சி தான்" என்று கூறும் அவர் தனது பாக்கெட்டில் இருந்து 400 டாலர்களை எடுக்கிறார். இது இந்திய மதிப்பில் 28,000 ரூபாயாகும். இந்த பயணத்தின் போது நான் சந்தித்த மிகவும் சிறப்பான மனிதர் இவர் தான்" என்று கூறுகிறார் ஹரால்ட்.