Job Application: இப்படி விண்ணப்பித்தா 60 என்ன? 1000 அப்ளிகேஷனுக்கும் வேலை கிடைக்காது!

60 வேலைகளுக்கு விண்ணப்பித்த பெண்ணை யாருமே நேர்க்காணலுக்கு கூப்பிடவில்லை! ஆச்சரியத்தின் பின்னணி என்ன தெரியுமா?  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 23, 2022, 06:52 AM IST
  • 60 வேலைகளுக்கு விண்ணப்பித்த பெண்
  • நேர்க்காணலுக்கு அழைப்பே வரவில்லை
  • என்னவொரு துரதிருஷ்டம்! காரணம் தெரியுமா?
Job Application: இப்படி விண்ணப்பித்தா 60 என்ன? 1000 அப்ளிகேஷனுக்கும் வேலை கிடைக்காது! title=

புதுடெல்லி: 23 வயதான பெண் வேலை தேடி 60 இடங்களில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார், ஆனால் எந்த ஒரு இடத்திலிருந்தும் பதில் வரவில்லை. தனது நேரம் சரியில்லை என்று நொந்துக் கொண்ட பெண்ணுக்கு தனது தவறு புரிந்தபோது பிழை புரிந்தது.

இன்றைய காலகட்டத்தில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும்போது, செய்யும் வேலையை சரியாக செய்வது மிகவும் முக்கியமானது. அதேபோல, வேலைக்கு விண்ணப்பிக்கும்போது சரியான முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

சுமார் 60 வேலைகளுக்கு விண்ணப்பித்த பெண்ணுக்கு (Viral News on Girl), ஒரு இடத்தில் இருந்தும் பதிலே வரவில்லை. அதன்பிறகு, தனது சுயவிவரத்தை திருத்தி அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறார் அந்தப் பெண்.

அப்போதுதான், ஏன் யாரும் தன்னை வேலைக்கு அழைக்கவில்லை என்று அவருக்கு புரிந்ததும், தவறுக்காக வருத்தப்பட்டதும், வெட்கி தலை குனிந்தாராம்!

அப்படி என்ன தப்பு செய்துவிட்டார் இந்த பெண்? மிகப்பெரிய தவறு இல்லை என்றாலும், பொருத்தமான கோப்பை அனுப்புவதற்கு பதிலாக வேறு ஒரு ஃபைலை அனுப்பியதால் ஏறபட்ட தவறு, வேலை கிடைக்க விடாமல் தடுத்திருக்கிறது.

தனது தகுதிகள் மற்றும் சுயவிவரங்கள் கொண்ட கோப்பிற்கு பதிலாக, தனது மாதவிடாய் டிராக்கரில் நகலை இணைத்துவிட்டார்.

ALSO READ | பந்தாவா பைக் ஓட்டி பக்காவா மாஸ் காட்டிய மணப்பெண்

பீரியட் டிராக்கரின் நகல்
தி சன் செய்தியின்படி, 23 வயதான ஆஷ்லே கீனன், தனது ட்விட்டர் கணக்கில் ஒரு இடுகையில் தனது கதையைப் பகிர்ந்து கொண்டார், வேலைக்கு விண்ணப்பிக்கும் போது (Viral News) சுயவிவர குறிப்புக்கு பதிலாக பீரியட் டிராக்கரின் நகலை இணைத்ததால் தனது 60 விண்ணப்பங்களுக்கும் எந்த பதிலும் வரவில்லை என்று தெரிவித்திருந்தார்.
 
அயர்லாந்தில் உள்ள டப்ளினில் வசிக்கும் ஆஷ்லே கீனன் என்பவர் ட்வீட் செய்துள்ளார், 'நான் பல இடங்களில் வேலைக்கு விண்ணப்பித்தும், ஆனால் ஏன் எந்தப் பகுதியிலிருந்தும் பதில் வரவில்லை என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எல்லா விண்ணப்பங்களிலும்  பீரியட் டிராக்கர் ஆவணத்தை இணைத்திருக்கிறேன், என்னுடைய CV அதில் இல்லை'.

இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்த பிறகு, இந்த ட்வீட்டுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் வந்து குவிந்தன. சிரிக்க வைக்கும் உண்மைக் கதையை வெளியிட்ட ஆஷ்லேயை அனைவரும் கலாய்த்தனர்.  

ALSO READ | என் தேவதை வந்துட்டா!! தேம்பி அழுத மாப்பிள்ளை, தேற்றிய மணப்பெண், வைரலான வீடியோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News