யோகா செய்யும் நாயை கண்டு வியக்கும் நெட்டிசன்கள்!

நாய் ஒன்று அதன் உரிமையாளருடன் இணைந்து யோகா செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் பலரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 11, 2022, 01:29 PM IST
  • பலராலும் விரும்பி வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளில் முக்கியமான ஒன்று நாய்.
  • magnus என்கிற நாய் உரிமையாளர் ஹுமன் உடன் யோகா செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறது.
யோகா செய்யும் நாயை கண்டு வியக்கும் நெட்டிசன்கள்! title=

சமீப காலங்களாக வளர்ப்பு பிராணிகளின் சில செயல்கள் பலரையும் கவர்ந்து வருகிறது.  மனிதர்களை போலவே அவை பல வேலைகளை செய்கிறது.  பலராலும் விரும்பி வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளில் முக்கியமான ஒன்று நாய், இவை தான் நன்றியுள்ள பிராணியாக கருதப்படுகிறது.  குழந்தைகளை இவை செய்யும் சேட்டைகள் விரைவில் பலரது கவனத்தையும் ஈர்த்துவிடுகிறது.  அந்த வங்கியில் தற்போது ஒரு நாய் அதன் உரிமையாளருடன் இணைந்து யோகா செய்யும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | குறி வைத்த சிங்கம், தப்பித்ததா காளை? நெஞ்சை பதபதைக்கும் வைரல் வீடியோ

magnusthetheraphydog என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கும் இந்த வீடியோவில், magnus என்கிற நாய் உரிமையாளர் ஹுமன் உடன் யோகா செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறது.  ஹுமன் மற்றும் magnus யோகா செய்வதற்கு தேவையான விரிப்பை எடுத்துக்கொண்டு கொண்டு வந்து தரையில் விரித்து யோகா செய்ய தயராகின்றனர்.  பின்னர் அந்த விரிப்பில் ஹுமன் அமர்ந்து யோகா செய்ய ஆரம்பிக்கிறார், அவர் செய்வதை பார்த்து அப்படியே அவரை போலவே அந்த magnus நாயும் யோகா செய்கிறது. 

dog

மனிதர்கள் செய்வதை போலவே இந்த நாய் யோகாசனங்களை அழகாக செய்வது இணையத்தில் பார்ப்பவர்கள் அனைவரையும் கவர்ந்து இருக்கிறது.  அந்த வீடியோவுடன், “எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் நாங்கள் magnus ஐ சேர்த்துக் கொள்கிறோம், உடற்பயிற்சியிலும் கூட சேர்த்து கொள்கிறோம்.  இதை நாங்கள்  “Doga” என்று அழைக்கிறோம்.  நாங்கள் magnus-க்கு கற்று கொடுத்த அணைத்து திறமைகளையும் magnus செய்வதை கண்டு நாங்கள் ஆச்சர்யமடைந்தும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம் என்ற கேப்ஷனையும் பதிவிட்டு இருக்கிறார்.

 

இதுவரை இந்த வீடியோவை இணையத்தில் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட பாரவையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  பல லைக்ஸுகளும், கமெண்டுகளை இந்த வீடியோ பெற்று வருகிறது.  உதாரணமாக 'சிறந்த பயிற்சியாளர்', 'நான் இதை மிகவும் விரும்புகிறேன்' என்றவாறு பலரும் நேர்மறையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | மலைப்பாம்புடன் சாலையில் வலம் வந்த குடிபோதை ஆசாமி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News