வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
மேலும் படிக்க | கழுகிடம் சிக்கி பாடாய்படும் பாம்பு தப்பித்ததா: வைரல் வீடியோ
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அந்தவகையில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் மற்றும் அரிய வகை பறவை இனங்களின் வசிப்பிடமாக உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் காரணமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அத்துடன் நாள்தோறும் இந்த சாலையில் மைசூரில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கும் நீலகிரியில் இருந்து மைசூர் செல்லக்கூடிய ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இதனை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது கண்டு ரசித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது, மைசூர் செல்லும் பந்திப்பூர் சாலையில் வாகனங்கள் சாலையில் வரும்பொழுது நடு ரோட்டில் கரடி ஒன்று ஹாயாக படுத்திருந்தது வாகனங்கள் வருவதைக் கண்ட கரடி மெதுவாக எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு புலிகள் காப்பகத்தில் சபாரி சென்ற வாகனத்தை கூட்டத்தில் இருந்த யானை ஒன்று துரத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து தற்போது, லாரியை வழிமறித்து சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற கரடியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான இந்த வீடியோவில் இந்தக் காட்சியைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இவருக்கு வந்த சோதனைய பாருங்க: காண்டான கங்காரு, வைரலான வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR