தடவிக்கொடுத்த பெண்... செம ரியாக்ஷன் காட்டிய குரங்கு: வேற லெவல் வைரல் வீடியோ

Monkey Viral Video: சமீபத்தில் குரங்கின் ஒரு மிக வித்தியாசமான வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இது பார்த்தவுடன் நம்மை சிரிக்க வைக்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 28, 2023, 06:49 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் dramebaazchhori99 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
தடவிக்கொடுத்த பெண்... செம ரியாக்ஷன் காட்டிய குரங்கு: வேற லெவல் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

விலங்குகளின் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதுவும் குறிப்பாக, பாம்பு, குரங்கு, நாய், பூனை, சிங்கம், புலி ஆகிய விலங்குகளுக்கு இணையவாசியகளிடையே அதிக க்ரேஸ் உள்ளது. இந்த விலங்குகளின் வீடியோக்கள் பகிரப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. இந்த வீடியோக்களில் நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பல விஷயங்களை நாம் காண்கிறோம். இவை நம்மை ஆச்சரியப்படவும் அதிசயிக்கவும்  வைக்கின்றன.

குரங்கு வீடியோகளுக்கென இணையத்தில் தனி கிரேஸ் உள்ளது. குரங்குகளின் கோமாளித்தனத்தையும் அவை செய்யும் சேட்டைகளையும் இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. குரங்குகள் செய்யும் பல வித குறும்புகளை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். 

சமீபத்தில் குரங்கின் ஒரு மிக வித்தியாசமான வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இது பார்த்தவுடன் நம்மை சிரிக்க வைக்கிறது. இந்த வீடியோவில் ஒரு பெண் மற்றும் ஒரு குரங்கை காண முடிகின்றது. பெண் பாசமாக குரங்கை தழுவ அதற்கு குரங்கு அளிக்கும் ரியாக்ஷன் அந்த பெண்ணை மட்டுமல்ல இந்த வீடியோவை காணும் அனைவரையும் சிரிக்க வைக்கின்றது. இந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.

பெண்ணை பார்த்து பயந்த குரங்கு 

சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வரும் இந்த வீடியோவில், ஜன்னல் மீது அமர்ந்திருந்த குரங்கை நோக்கி சிறுமி செல்வதை காண முடிகின்றது. அவர் பயப்படாமல் குரங்கின் அருகில் சென்று அதைத் தொட்டு தன்னை நோக்கிப் பார்க்குமாறு சைகை காட்டுகிறார். குரங்கு வெறு ஏதோ ஒன்றில் மூழ்கி இருக்கிறது. அந்த குரங்கு அந்த பெண்ணை பார்த்தவுடன் திடீரென பயந்துவிட்டது போல ரியாக்ஷன் காட்டுகிறது. ஏதோ பயங்கரமான ஒன்றைப் பார்த்தது போல் குரங்கு நடந்துகொள்கிறது. பெண்ணின் முகத்தைப் பார்த்த குரங்கு தன் சுயநினைவை இழந்தது போல் செய்கிறது. ஜன்னலில் அமர்ந்திருந்த குரங்கு திடீரென கீழே விழுகிறது. குரங்குக்கு திடீரென என்ன நேர்ந்தது என அந்த பெண்ணே ஒரு கணம் அதிர்ச்சி அடைகிறார். 

மேலும் படிக்க | க்யூட்டாய் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் நாய்க்குட்டிகளின் டேலண்ட் டெஸ்ட் வீடியோ வைரல்

குரங்கின் அட்டகாசமான அலப்பறையை இங்கே காணலாம்:

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

(@dramebaazchhori99)

வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் dramebaazchhori99 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'அப்படி குரங்கு என்ன பார்த்தது?' என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். 'குரங்கு பயப்படுவதற்கு என்ன காரணம்' என்று மற்றொரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் இப்படிப்பட்ட ரிஸ்கை எடுக்கமாட்டேன்! அலற வைக்கும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News