சாலை சந்திப்புகள் மற்றும் ரயில்வே பாதைகளை கடக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறிய கவனக்குறைவுக்கும் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி வரும். உலகளவில் அதிக விபத்துகள் நடக்கும் நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் இருக்கிறது. இதில் சாலை விபத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பை எதிர்கொள்கின்றனர். ஒவ்வொரு 3 நிமிடத்துக்கும் இந்தியாவின் ஏதாவதொரு பகுதியில் சாலை விபத்து நடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
உயிரிழப்பை கடந்து உடல் பாகங்கள் சேதமடைந்து வாழ்க்கையில் சிரமங்கள் எதிர்கொள்பவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் கவனக்குறைவு. இதைத் தவிர்த்து மதுபோதையில் வாகனத்தை ஓட்டுபவர்கள், அவர்கள் ஏற்படுத்தும் விபத்தால் பாதிக்கப்படும் நபர்கள் என சாலை விபத்துகளின் சோக பக்கங்கள் நீள்கின்றன. வண்டி ஓட்டும் ஒவ்வொரு வரும், முறையாக சாலை விதிமுறைகளை கடைபிடித்தால் பெரும்பான்மையான விபத்தை தவிர்த்துவிடலாம். ஆனால், மக்கள் சில நொடிகளில் செல்ல வேண்டும் என்பதற்காக வேகத்தை கையில் எடுக்கும்போது வாழ்க்கையை பறி கொடுக்க வேண்டிய சூழல் வருகிறது.
ஆனால், இணையத்தில் வைரலாகியிருக்கும் வீடியோவில், நல்வாய்ப்பாக ரயில் விபத்தில் இருந்து ஒருவர் உயிர் பிழைத்துவிட்டார். அவருக்கு பதிலாக விபத்தில் சிக்கும் வண்டி சுக்குநூறாக உடைந்து விடுகிறது. காண்போர் அனைவரையும் இந்த வீடியோ பதைபதைக்க வைக்கிறது. அந்த வீடியோவில் மக்கள் அனைவரும் ரயில் பாதையை கடக்க தயாராக இருக்கின்றனர். இருவழி ரயில் பாதை என்பதால், திடீரென ஒரு ரயில் வருகிறது. இதனைப் பார்த்த அனைவரும் பாதி வழியில் அந்த ஒற்றை ரயில் செல்வதற்காக காத்திருக்கின்றனர்.
Sir, you can collect your bike from the next station. pic.twitter.com/Hp9bNYkbhe
— Dr. Ajayita (@DoctorAjayita) August 30, 2022
அந்த நேரத்தில் இன்னொரு ரயில் மற்றொரு பாதையில் வருகிறது. இதனைக் கவனித்த மக்கள் அனைவரும் பாதுகாப்பாக ஓரமான இடத்துக்கு வரும்போது, பைக் வைத்திருக்கும் நபரால் உரிய நேரத்தில் பைக்கை நகர்த்த முடியவில்லை. அதற்குள் ரயில் வந்துவிடுவதால், அவர் பைக்கைவிட்டுவிட்டு ஓடி வருகிறார். நொடிப்பொழுதில் பைக் மீது ரயில் மோதியதில் அது சுக்குநூறாக உடைந்துவிடுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ