குரங்குப்பிடி வேண்டாம்மா: அம்மாவை தாஜா செய்ய செல்லம் கொஞ்சும் குட்டிக் குரங்கு

கண்டிக்கும் தாயை அன்பால் சமாதனப்படுத்தும் குட்டியின் க்யூட் வீடியோ வைரல்... இது குரங்குப்பிடியின் எதிர்வினையாய் வந்த குரங்குச் சேட்டை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 28, 2022, 04:15 PM IST
  • அம்மாவை தாஜா செய்ய செல்லம் கொஞ்சும் குட்டிக் குரங்கு
  • அன்பால் கட்டிப்போடுவியா பார்க்கலாம் சவால் விடும் குரங்குக்குட்டி
  • குரங்குக்குட்டியின் புத்திசாலித்தனமான அன்பு
குரங்குப்பிடி வேண்டாம்மா: அம்மாவை தாஜா செய்ய செல்லம் கொஞ்சும் குட்டிக் குரங்கு title=

அன்பு ஒன்றே வாழ்வின் அடிப்படை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் பொதுவனது. அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ் என்று சொல்வது வெறும் பழமொழியோ முதுமொழியோ இல்லை என்பதை அவ்வப்போது நாம் உணர்ந்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

சமூக ஊடகங்களில் தற்போது பல வீடியோக்கள் வைரலாகின்றன. அவற்றில் பல விலங்குகளின் வீடியோக்களாகவும், தொழில்நுட்ப மற்றும் பயண வீடியோக்களாகவும் இருக்கின்றன.

வைரலாகும் விலங்குகள் வீடியோக்களில் பலவிதமான விலங்குகளின் குறும்புகளும், சேட்டைகளும்ம், அன்பும், மோதலும் காதலும் வெளிப்படுகின்றன. இதுபோன்ற விஷயங்களை பார்ப்பது அபூர்வம் என்பதால், நேரில் பார்த்தவர்கள் அவற்றை வீடியோக்களாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றுகின்றனர்.

மேலும் படிக்க | வம்புக்கு இழுக்கும் விவகார குழந்தை - வைரல் வீடியோ

அண்மையில் குரங்குகளின் வீடியோ ஒன்று வைரலாகிறது. இந்த வீடியோ பதிவேற்றப்பட்ட உடனே மில்லியன் கணக்கானவர்கள் பார்த்து ரசித்து லைக் செய்திருக்கின்றனர்.

இந்த வைரல் வீடியோவில், அம்மாவுடன் இருக்கும் குட்டி மரத்தில் ஏற முயல்கிறது. உடனே அம்மா, குட்டியின் வாலை பிடித்து இழுத்து அதை தடுக்கிறது. குரங்குப்பிடி என்றால் அது வலுவானதாக இருக்கும் என்பது ‘குரங்குப்பிடி’ என்ற வார்த்தையில் இருந்தே தெரிந்துக் கொள்ளலாம்.

தாயின் குரங்குப்பிடியில் இருந்து விலக முடியாத நிலையில், குட்டி என்ன செய்தது தெரியுமா? க்யூட் குட்டி வீடியோவை பார்த்து ரசியுங்கள்...

குட்டி, அம்மாவை தாஜா செய்ய என்ன செய்கிறது என்பதைப் பார்த்தாலே முகத்தில் புன்னகை பூக்கிறது. நமக்கு புன்னகை பூத்தால், குழந்தையின் முத்தம் தாய்க்கு பொன்னகையே போட்ட மாதிரிதானே இருக்கும்?

மேலும் படிக்க | என்னை செல்லம் கொஞ்ச மாட்டியா: வைரலாகும் யானையின் கட்டிப்பிடி வைத்தியம்

மரத்தில் மேலே ஏற முடியாத நிலையில் என்ன செய்வது என்று புரியாமல், அம்மாவை செல்லம் கொஞ்சுகிறது குரங்கு குழந்தை. மரத்தில் இருந்து அப்படியே கீழே திரும்பி, அம்மாவின் மார்பையும் தோளையும் பிடித்து இறங்கி மார்பில் சாய்ந்து முகத்தில் முத்தமழை பொழிகிறது புத்திசாலிக் குழந்தை குரங்கு.

குழந்தையின் அன்பை ரசிக்கும் அம்மா குரங்கின் முகத்திலும் புன்னகை மலர, குழந்தையின் அன்பை முழுமையாக உணர்வுபூர்வமாக அனுபவிப்பது அந்த பாசக்கார தாயின் முகத்தில் எதிரொலிக்கிறது.

குட்டி தாஜா செய்தாலும், அன்பான முத்தம் கொடுத்தாலும், தாய் தனது குரங்குப்பிடியை வலுவாகவே வைத்திருக்கிறது. முத்தம் கொடுத்து காரியம் சாதிக்கப் பார்க்கும் கெட்டிக்கார குட்டியின் புத்திசாலித்தனத்தை அம்மா ரசிக்கிறது.

வாழ்க்கையின் இதுபோன்ற இயல்பான நிகழ்வுகளையும், வித்தியாசமான வீடியோக்களையும் பதிவேற்றுவதில் பிரபலமான @buitengebieden என்ற டிவிட்டர் பக்கத்தில் இருந்து இந்த அன்பு வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சாலை உலா செல்லும் வாத்துக் குடும்பம்: போக்குவரத்து காவலரின் மனிதாபிமான உதவி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News