Viral Video Of A Man In Wheel Chair Bungee Jumping : நம்மில் பலருக்கு, உடலின் செயல்பாடுகள் சரியாக இருந்துமே பல விஷயங்களை செய்ய பயந்து கொண்டிருப்போம். ஆனால், இங்கு ஒரு நபர் தனக்கு கால்கள் செயலிழந்த நிலையிலும், வீல் சேர் உடன் பஞ்சி ஜம்பிங் செய்திருக்கிறார். இது குறித்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீல் சேர் உடன் குதித்த நபர்:
இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒருவர் வீல் சேருடன் 117 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் க்ளிப்பிங், பதிவாகியிருக்கிறது. இதனை, himalayanbungy என்ற இன்ஸ்டா பக்கம் வெளியிட்டிருக்கிறது. இந்த சாகசம் செய்யப்பட்ட இடம், உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ். இங்குதான் இந்தியாவிலேயே மிக உயரமான பன்ஜி ஜம்பிங் செய்யும் தளம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சாகசத்தை செய்த நபரின் பெயர், அபையா டோக்ரா. இவரை குதிக்க வைக்கும் முன்னர், அவரது சேருடன் சேர்த்து அவருக்கும் அதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவர் சேருடன் குதிப்பதை பார்க்க நமக்கே பயமாக இருக்கிறது. ஆனால், குதித்த பின்பு அவர் முகத்தில் அந்த மகிழ்ச்சியை பார்க்க நம் மனதிலும் புன்னகை மலர்கிறது.
இந்த வீடியோ, நெட்டிசன்களிடையே கலவையான விமர்சனக்களை பெற்றிருக்கிறது. ஒரு சிலர், “இவரது தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும் என்று கூற, இன்னும் சிலர் “அற்பமான வியூஸ்களுக்காக இப்படி ஒருவரின் உயிரை பணயம் வைப்பது தவறு” என்று கூறியிருக்கின்றனர். இந்த நெகடிவான விமர்சனங்களை பார்த்த சாகசம் செய்த நபர், தான் இதை மகிழ்ச்சியுடன் செய்ததாகவும், வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இதை செய்வேன் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க | சீச்சீ! அப்பாவே மகளை திருமணம் செய்து கொண்ட அவலம்..என்னங்க நடக்குது இங்க?
மேலும் படிக்க | சரக்கடித்து தள்ளாடிய நாய்! விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வைரல் வீடியாே..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ