கோலமாவு கோகிலா: புதிர் வைத்து டிவிட் போட்ட படக்குழு!!

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் கோலமாவு கோகிலா. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 

Last Updated : May 11, 2018, 09:08 AM IST
கோலமாவு கோகிலா: புதிர் வைத்து டிவிட் போட்ட படக்குழு!! title=

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் கோலமாவு கோகிலா. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், "எதுவரையோ" லிரிக்கல் வீடியோ ஆகியவை வெளியேறி பெறும் வரவேற்பை பெற்றது. 

நயன்தாரா, சரண்யா, யோகிபாபு, ஜாகுலின், நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிபதிவு செய்கின்றார், நிர்மல் படதொகுப்பு செய்கின்றார். இப்படத்தில் 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தில் இருந்து அடுத்த பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

`கல்யாண வயசு' என்று துவங்கும் அந்த பாடலை புதுமுக பாடலாசிரியர் ஒருவர் எழுதியிருப்பதாகவும், அவரை கண்டுபிடிக்க முடியுமா என்றும் இசையமைப்பாளர் அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் புதிர் வைத்துள்ளனர். இந்த பாடல் வருகிற 17-ம் தேதி ரிலீசாக இருக்கிறது.

 

 

 

Trending News