IRCTC ரொம்ப உஷாரு... மேக்னாவுக்கு வாய்ப்பில்லை ராஜா... கண்ணீர்விடும் சிங்கிள்ஸ் - என்ன விஷயம்?

Indian Railways: ரயில்வேயின் IRCTC தளத்தை இளைஞர்கள் கடந்த சில நாள்களாக போட்டுத்தாக்கி வருகின்றனர். அதற்கான காரணமாக வைரல் பதிவு குறித்து இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 5, 2024, 09:15 AM IST
  • IRCTC தளம் மூலம் ரயிலில் டிக்கெட் எடுக்கலாம்.
  • ரயிலில் தட்கல் மற்றும் முன்பதிவு செய்வது மிக மிக கடினமாகும்.
  • ரயிலில் செல்ல இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
IRCTC ரொம்ப உஷாரு... மேக்னாவுக்கு வாய்ப்பில்லை ராஜா... கண்ணீர்விடும் சிங்கிள்ஸ் - என்ன விஷயம்? title=

Indian Railways, Viral Post: பலருக்கும் பயணம் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். குறிப்பாக, ரயில் மற்றும் பேருந்து போன்ற பயணங்களை மக்கள் அதிகம் ரசிப்பார்கள். பேருந்து பயணம் சிலருக்கு ஒத்துவரும், ரயில் பயணம்தான் பலருக்கும் பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருப்பதை போன்று, இளசுகளுக்கு தனிக்காரணம் ஒன்று இருக்கும். அது பேருந்தோ அல்லது ரயிலோ ஒவ்வொரு பயணத்தின்போதும் இளைஞர்கள் இதை எதிர்பார்த்துதான் செல்வார்கள் எனலாம். 

மேக்னாவுக்கு வாய்ப்பில்ல ராஜா...

சிங்கிள் இளைஞர்கள் ஒவ்வொரு முறை ரயிலில் முன்பதிவு செய்து செல்லும்போது வாரணம் ஆயிரம் சூர்யா போன்று மேக்னாவை (சமீரா ரெட்டி) சந்தித்து டூயட் பாடிவிட மாட்டோமா என்ற ஆசை இருக்கும். ஆம், அதுவும் சூர்யாவும் மேக்னாவும் அமர்ந்திருந்ததை போல ஜன்னல் ஓரம், எதிர் எதிரே இருப்பது போன்றே வேண்டும் எனவும் இளைஞர்கள் எதிர்பார்த்து செல்வார்கள். ஆனால், யாருக்குமே அதுபோன்ற இருக்கைகள் கிடைக்காது என்பதுதான் யதார்த்தமாக உள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் கோடிகளில் ஒருவருக்குதான் சூர்யா - மேக்னா போன்ற வாய்ப்பு ஏற்படும் எனலாம். 

தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது ரயிலில் (Indian Railways) டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு தெரியும் அது மிகவும் கடினமான ஒன்று என. ஒரு இளம் பெண், யார் என்றே தெரியாத அந்நியருக்கு அடுத்த இருக்கையைப் பெறுவது முற்றிலும் சாத்தியமற்றதாகும். அருகில் மட்டுமின்றி எதிரே அமர்வதும் அரிதினும் அரிதுதான். இதற்கு காரணம், ரயில்வே இணையதளத்தின் அல்காரிதம் (IRCTC Algorithm) என இணையத்தில் தற்போது இளசுகள் குமுறி வருகின்றனர்.

மேலும் படிக்க | காதலுக்காக என்ன செய்யலாம்? 2000 கோடி ரூபாயை வேண்டாம் என்று சொன்ன காதலி!

வைரல் பதிவு

X தளத்தில் கடந்த ஜன. 3ஆம் தேதி இரவு அபிஷேக் (Abisheik) என்ற பயனர் இதுகுறித்த தனது சோகத்தை பதிவு செய்திருந்தார். அதில்,"டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஒரு இளம் வயது ஆண் மற்றும் இளம் பெண் இருவரும் நேருக்கு நேர் அல்லது அருகருகே இருக்கைகளை பெறக்கூடாது IRCTC கவனமாக பார்த்துக்கொள்கிறது" என குறிப்பிட்டு, Breaking Bad சீரிஸின் வால்டர் வெயிட் கதாபாத்திரம் கவனமாக ரசாயனம் கலப்பை செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு மீம் போட்டிருந்தார். இந்த பதிவு வைரலானது. தொடர்ந்து, கமெண்ட் பிரிவில் பலரும் தங்களின் ஆற்றாமைகளை வெளிப்படுத்தி வந்தனர். 

அதில் பல கமெண்டுகள் உங்களை சிரிப்பலையில் ஆழ்த்தும். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

"படங்களில்தான் ஹீரோவுக்கு ரயில் பயணத்தில் ஹீரோயின் வருவார். நிஜத்தில் நமக்கு தாத்தாவும் பாட்டியும் தான் வருவார்கள். அவர்களும் சில மாதங்களுக்கு முன்பதிவு செய்த எனது லோயர் பெர்த் இருக்கையை கேட்பார்கள்" என ஒருவர் பதிவிட்டிருந்தார். மற்றொருவர் நகைச்சுவையாக,"IRCTC இன் அல்காரிதம், நான் எப்போதும் கழிவறை அருகில் இருக்கையைப் பெறுவதை உறுதிசெய்கிறது" என பதிவிட்டிருந்தார். 

மேலும் மற்றொருவர்,"நம் அருகில் குழந்தைகளுடன் இருக்கும் குடும்பங்களுக்கு இருக்கைகளை ஒதுக்குவதன் மூலம், உங்களை இரவில் தூங்கவிடாமல் IRCTC பார்த்துக்கொள்ளும்" என பதிவிட்டிருந்தார். மேலும், ஒருவர்,"IRCTC அல்காரிதம் எனது இருக்கையை RAC ஆக உறுதிசெய்யும்" என பதிவிட்டிருந்தார். இப்படி IRCTC தளத்துடன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம். உங்களுக்கும் இதுபோன்ற தனித்த அனுபவம் உள்ளதா IRCTC தளத்தோடு...?

மேலும் படிக்க | ரயிலில் தூங்க தூளி கட்டி பல்பு வாங்கிய தில்லாலங்கடி: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News