அப்பாடா மழை வந்துடுச்சு: மழையில் நாயின் குத்தாட்டம்... மீண்டும் மீண்டும் பார்க்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Funny Dog Video: கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் திடீரென மழை பெய்கிறது. அப்போது மழையில் நாய் ஆடும் மாஸ் நடனம் நம்மை வியக்க வைக்கும் வண்ணம் உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 19, 2023, 08:06 AM IST
  • மழையில் நாயின் மாஸ் நடனத்தை இந்த வீடியோவில் காணலாம்.
  • இது சமூக ஊடக தளமான ட்விட்டரில் @rupin1992 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
அப்பாடா மழை வந்துடுச்சு: மழையில் நாயின் குத்தாட்டம்... மீண்டும் மீண்டும் பார்க்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: மனிதர்களாகிய நாம் பல வித இலக்குகளை நோக்கி ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டு இருக்கிறோம். வெயில், மழை, குளிர் என பாராமல் நம் வாழ்க்கை சில சமயம் மெதுவாகவும் சில சமயம் வேகமாகவும் நகர்ந்துகொண்டு இருக்கிறது. பல சமயம் பல வித இறுக்கங்களால் நாம் தளர்ந்து போகிறோம். ஆனால், முந்தைய காலங்களுக்கும் இப்போதுள்ள நேரத்துக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. தற்போது நம்மை நமது இறுக்கங்களிலிருந்து விடுவித்து ஒரு வித மாறுதலை அளிக்க பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சமூக ஊடகம். 

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

சமீபத்தில் அப்படி ஒரு மாஸான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்ப்பவர்களால் கண்டிப்பாக தங்கள் சிரிப்பை அடக்க முடியாது. இந்நாட்களில், இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வெப்பம் அதிகரித்துள்ளது. கோடை வெயிலால் மக்கள் படாத பாடு படுகிறார்கள். அதே சமயம் பல இடங்களில் கோடை வெயிலுக்கு ஆறுதலாக மழையும் பெய்து வருகிறது.

கோடை வெயிலில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெப்பத்திலிருந்து நிவாரணம் பெற, விலங்குகளும் நிழல் அல்லது தண்ணீரைத் தேடுகின்றன. இப்படிப்பட்ட தருணங்களில், வெயில் வாட்டி வதைக்கும் போது, திடீரென மழை பெய்தால் அப்போது நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. நமக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் இது கொள்ளை மகிழ்ச்சியை அளிக்கும். இதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த வீடியோ உள்ளது. திடீரென மழை பொழிவதால் குஷியான நாய் மகிழ்ச்சியில் ஆடுகிறது. வெப்பத்தில் இருந்து நிவாரணம் கிடைத்தவுடன் நாய் போடும் ஆட்டம் மிக வேடிக்கையாக உள்ளது. 

மேலும் படிக்க | ’பிறவி அதிசயம்’ மூன்று ராட்சத கொம்புகளை கொண்ட கிடா - வைரல் வீடியோ

மழையில் குத்தாட்டம் போட்ட நாய் 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ குவாஹாட்டியில் இருந்து வெளியாகியுள்ளது. கடும் வெயிலுக்குப் பிறகு அங்கு பெய்த மழையால் மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த வீடியோவில் மழை வந்ததால் நாய் கொண்ட மகிழ்ச்சியை காண முடிகின்றது. கடும் வெயிலுக்குப் பிறகு மழை பெய்வதால் மனிதர்கள் அடையும் சந்தோசத்தை நாம் பார்த்துள்ளோம். ஆனால், இந்த வீடியோவில் இந்த நாய் கொட்டும் மழையில் நனையும் காட்சி மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. 

மழையை ரசிக்கும் விதத்தில் நாய் ஒன்று குதித்து குதித்து கொண்டாடுவதை வீடியோவில் காண முடிகின்றது. நடுவில் அவ்வபோது நாய் தனது வயை திறந்து மழைத் துளிகளை குடிப்பதையும் காண முடிகின்றது. குதித்து ஆடும் சுவாரசியத்தில் நாய் கீழே விழுகிறது. ஆனாலும் நாய் இப்படி மீண்டும் மீண்டும் செய்கிறது. 

மழையில் நாயின் மாஸ் நடனத்தை இந்த வீடியோவில் காணலாம்:

வீடியோ வைரல் ஆனது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத வெப்பம் நிலவி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மழையால் மக்கள் மற்றும் விலங்குகள் அதிக நிம்மதியை உணர்கிறார்கள். மழையை ரசித்து டான்ஸ் ஆடும் நாயின் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இது சமூக ஊடக தளமான ட்விட்டரில் @rupin1992 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்குபல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.  

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ’நல்லி எழும்பா இருந்தா நல்லா இருந்திருக்கும்’ எலும்பை ரசித்து சுவைத்து சாப்பிடும் ஒட்டகச் சிவிங்கி - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News