பயணங்களின் போது குழந்தைகளை உடன் கொண்டு செல்வது மிகவும் சவாலான ஒன்று என்பது நிச்சயம் அனைத்து பெற்றோர்களுக்கும் தெரிந்த ஒன்று. வீட்டில் சேட்டை செய்யாத குழந்தைகள் கூட பயணம் செய்யும்பொழுது கண்டிப்பாக ஏதேனும் இடையூறை ஏற்படுத்தும். அதுபோன்று ஒரு சம்பவம் தான் பிரேசிலியாவில் இருந்து பிரேசிலில் உள்ள குயாபா செல்லும் விமானத்தில் அரங்கேறியுள்ளது. அவ்வாறு அழுத அந்த குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு விமான பணிப்பெண் ஒருவர் ஆறுதல் கூறி அமைதிப்படுத்தும் காட்சி அனைவரின் இதயங்களையும் கவர்ந்து இருக்கிறது.
ஒரு விமானத்தில் குழந்தையை வைத்துக்கொண்டு பயணம் செய்வது கடினமானதாக இருந்தாலும் விமானத்தில் பணியாற்றும் நபர்கள் எவ்வாறு பயணிகளுக்கு ஏற்படும் இன்னல்களை சாதரணமாக்கி விடுகின்றனர் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாக அமைந்து இருக்கிறது. இந்த வைரல் வீடியோவானது குட் நியூஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் அழுது கொண்டிருக்கும் குழந்தையை விமான பணிப்பெண் தூக்கி வைத்துக்கொண்டு தனது தோளில் சாய வைத்துக்கொண்டு அழுகும் குழந்தையை அமைதிப்படுத்துகிறார், பின்னர் அமைதியான அந்த சிறுவன் தூங்க தொடங்குகிறான்.
இந்த வீடியோவுடன் விமான பணிப்பெண் குழந்தையை சமாதானப்படுத்த செய்த செயல் குறித்து கேப்ஷன் பதிவிடப்பட்டு உள்ளது. “விமானப் பணிப்பெண் அழும் குழந்தையை அமைதிப்படுத்த உதவுகிறார், விமானப் பணிப்பெண் அந்த குழந்தை விளையாடுவதற்காக சில ஸ்டிக்கர்களைக் கொண்டு வந்தார், இருப்பினும் அந்த குழந்தை அழுது கொண்டே இருந்தது. அதன் பின்னர் அவர் வைத்திருந்த சில சிறிய கோப்பைகளை கொண்டு வந்தார், அப்போதும் அந்த குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. அதனை தொடர்ந்து அந்த பணிப்பெண் அக்குழந்தையை தூக்கினார், அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக அந்த குழந்தை அவர் கைகளில் சென்றவுடன் அழுகையை நிப்பாட்டியது. அவர் எங்களிடம் அன்பை வெளிப்படுத்தினார் என்று கேப்ஷன் பதிவிடப்பட்டு இருந்தது.
இணையத்தில் பகிரப்பட்ட பிறகு, இந்த வீடியோ இதுவரை 1.6 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. இவரின் இந்த மனிதாபிமான செயலை கண்டு பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர். இந்த காட்சி விமான பணிப்பெண்கள் மீதுள்ள மரியாதையை உயர்த்தும் விதமாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க | முகத்தில் புன்னகை பூக்கவைக்கும் மணமக்களின் கியூட் சண்டை: வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR