'மான்ஸ்டர்' திரைப்படத்தின் FirstLook போஸ்டர் வெளியானது!

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உறுவாகி வரும் மான்ஸ்டர் திரைப்படத்தின் FirstLook போஸ்டர் வெளியானது!

Last Updated : Oct 23, 2018, 05:22 PM IST
'மான்ஸ்டர்' திரைப்படத்தின் FirstLook போஸ்டர் வெளியானது! title=

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உறுவாகி வரும் மான்ஸ்டர் திரைப்படத்தின் FirstLook போஸ்டர் வெளியானது!

‘ஒரு நாள் கூத்து’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் 'மான்ஸ்டர்'. இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். ‘மாயா’, ‘மாநகரம்’ படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவும், விஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் FirstLook போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக இப்படத்தினை குறித்து இயக்குநர் தெரிவிக்கையில்... நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ள திரைப்படம், குடும்பத்தோடு பார்க்கும் படமாக இருந்தாலும் நாங்கள் வேறு வகையில் இந்த படத்தினை எடுத்துள்ளோம் என தெரிவித்திருந்தார்.

கடந்த அக்டோபர் 1-ஆம் நாள் இப்படத்தின் அனிமேஷன் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். இந்த அனிமேஷன் போஸ்டரானது தமிழ் திரையுலக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது இந்நிலையில் தற்போது இப்படத்தின் FirstLook போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Trending News