வாழ்க்கைச் சக்கரம்! வயதானால் என்ன? ஆங்கிலத்தில் மழலையில் பேச கற்கும் அழகிய பாட்டி

வாழ்க்கை என்பது சக்கரம் என்று சொல்வதை உண்மையாக்கும் பாட்டியின் வீடியோ டிவிட்டரில் வைரலாகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 17, 2022, 02:14 PM IST
  • வயது என்பது வெறும் எண்களே
  • கற்பதற்கு வயது தடையேயில்லை
  • மழலையில் ஆங்கிலம் பேசும் பாட்டி
வாழ்க்கைச் சக்கரம்! வயதானால் என்ன? ஆங்கிலத்தில் மழலையில் பேச கற்கும் அழகிய பாட்டி title=

வாழ்க்கை என்பது சக்கரம் என்று சொல்வதை உண்மையாக்கும் பாட்டியின் வீடியோ டிவிட்டரில் வைரலாகிறது.

அற்புதமாக ஆங்கிலம் பேசும் காஷ்மீர் பாட்டியின் அழகான வீடியோ வைரலாகிறது. வீடியோவில் பாட்டியின் அழகை பார்த்து அனைவரும் அவரது ரசிகையாகிவிட்டனர்.

பாராட்டு மழையில் குளிக்கிறார் அழகான மழலை ஆங்கிலம் பேசும் பொக்கைவாய் பாட்டி.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், வயதான காஷ்மீரி பெண் ஒருவர், புதிதாக ஆங்கிலம் பேசுவதை பயிற்சி செய்துக் கொண்டிருப்பதைக் காணலாம். 

37 வினாடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோ இணையத்தை அதிர வைத்துள்ளது. காணொளியில் இருக்கும் பாட்டியின் ஸ்டைலைப் பார்த்தால், ‘வயசானாலும், அழகும், ஸ்டைலும் அப்படியே இருக்கு’ என்ற திரைப்பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது.  

மேலும் படிக்க | நாகப்பாம்பிடம் சிக்கிய பாம்பு...உயிர் பிழைக்குமா?

வைரலாகும் வீடியோவில் (Viral Video), இளைஞர் ஒருவர் சில பழங்கள், காய்கறிகள் மற்றும் விலங்குகளின் பெயர்களை காஷ்மீரி மொழியில் சொல்லச் சொல்ல, பாரம்பரிய உடை அணிந்த ஒரு மூதாட்டி அதன் ஆங்கிலப் பெயர்களைச் சொல்கிறார்.

பாட்டி, 'பூனை' என்ற பெயரை சொல்ல முதலில் கஷ்டப்படுகிறார். ஆனால், பின்னர் படபடவென தனது நினைவுத்திறனை நிரூபிக்கிறார்.  வெங்காயம், ஆப்பிள், பூண்டு மற்றும் நாய் என பலவற்றின் ஆங்கிலப் பெயரை சொல்கிறார்.  

வைரலான வீடியோவை சையத் எஸ் ஷா என்ற நபர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பாட்டியின் அழகையும், கற்றுக் கொள்ளும் ஆர்வத்தையும், மழலை மொழியையும் பார்த்து அனைவரும் அவரது ரசிகராக மாறியுள்ளனர். 

ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு படிக்கக் கற்றுக் கொடுக்கும் பெற்றோருக்கு வயதான பிறகு குழந்தைகள் கற்றுக் கொடுப்பது அற்புதமான அனுபவம் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கற்றுக் கொள்வதற்கு வயது தடையல்ல, மனமே தடை என்பதை உணர்த்தும் க்யூட் வீடியோ இது.

மேலும் படிக்க | நொடியில் திசை மாறிய அதிர்ஷ்ட காற்று!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News