பொதுவாகவே யானைகள் புத்திக் கூர்மை வாந்தவை. பல ஆண்டுகள் ஆனாலும் தான் தண்ணீர் குடித்த இடங்களை அப்படியே நினைவில் வைத்திருக்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மை. சமீபத்தீல் குட்டியானை செய்த ஒரு காரியம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் உயிரியல் பூங்காவில் உள்ள குட்டி யானை ஒன்று மிகப்பெரிய மரக்கட்டையை தூக்கி செங்குத்தான ஒரு மரக்கட்டையில் அசையாமல் நிலை நிறுத்துகிறது. அசாத்தியமான இந்த செயல் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பகீர் வீடியோ: ஓடும் ரயிலின் அடியில் சிக்கியபெண்; உயிர் பிழைத்தாரா
முதலில் அந்தக் கட்டையை தூக்குவதே மனிதனுக்கு சிரமமான காரியம். அப்படியே தூக்கினாலும் உருளையான கட்டையை மற்றொரு கட்டை மீது விழாமல் நிலை நிறுத்துவதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். ஆனால் இந்த குட்டியானை அசால்ட்டாக அந்த கட்டையை தும்பிக்கையில் தூக்கி நிறுத்திவிட்டது.
Basel Zoo. Switzerland:
You gotta be kidding me… pic.twitter.com/77tFEEsyzX
— Rex Chapman (@RexChapman) April 19, 2022
இந்த விடியோவை ரெக்ஸ் சேப்மேன் என்பவர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதற்கு பலரும் இந்த யானைக்குட்டியை ரசிப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | பனிப்பாறையில் சிக்கிய நாயை மீட்ட பாதுகாப்பு குழுவினர்! வைரலாகும் வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR