ரோபோ நாயை பார்த்து மிரண்டு தலைதெறிக்க ஓடும் ரியல் நாய்க்குட்டி வீடியோ வைரல்!

Real And Technical Dog Video Viral : நிஜ நாயும், தொழில்நுட்ப நாய்க்குட்டியும் சந்தித்தால்? துண்டைக்காணோம், துணியைக் காணோம் என ஓடும் நாய் எது? ஜாலி வீடியோவை பார்த்து லைக் போடுங்க... கமெண்ட் பண்ணுங்க என்று சொல்லும் சூப்பர் வீடியோ..

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 11, 2024, 04:02 PM IST
  • நிஜ நாயும், தொழில்நுட்ப நாய்க்குட்டியும் சந்தித்தால்?
  • துண்டைக்காணோம், துணியைக் காணோம் என ஓடும் நாய்
  • ஜாலி வீடியோவை பார்த்து லைக் போடுங்க
ரோபோ நாயை பார்த்து மிரண்டு தலைதெறிக்க ஓடும் ரியல் நாய்க்குட்டி வீடியோ வைரல்! title=

விலங்குகள் என்றாலே பலருக்கும் பயம் அதிகம். பொதுவாக பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால், நாய் போன்ற வீட்டு விலங்குகள் பலரின் செல்லக்குட்டிகளாக இருக்கின்றன. மக்கள் விலங்குகளைப் பார்த்து பயப்பட்டாலும், வீடியோக்கள் என்று வந்தால், பயப்படுத்தும் விலங்குகளின் வீடியோக்களையே அதிக அளவில் ரசிக்கின்றனர். தாங்கள் ரசிக்கும் வீடியோவை பிறருக்கும் ரசிக்கட்டும் என சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாக்கிவிடுகின்றனர்.

பெரும்பாலும், பாம்பு, சிங்கம், புலி, யானை என வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்களும், அவற்றால் ஏற்படும் ஆபத்து மற்றும் சிக்கிக் கொண்டு தவிர்க்கும் உயிரினங்களின் வீடியோக்கள் அதிகம் பகிரப்படுகின்றன. ஆனால், நாய் வீடியோக்கள் பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமானதாக இருக்கும். குலைத்து குலைத்தே மற்றவர்களை டென்ஷனாக்கும் நாய்க்குட்டிகளையே டென்ஷனாக்கிய ரோபோ நாய்க்குட்டி வீடியோ  (Viral Video) ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

தற்போது வைரலாகி வரும் வீடியோவில் யாரையும் ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது, அது ரோபோவாக இருந்தாலும் என்பது புரிகிறது. இந்த வீடியோ X தளத்தில் வைரலாகியுள்ளது. வைரல் வீடியோவை கீழே காணலாம்: 

இந்த வைரல் வீடியோவை பார்த்தால் சிரிக்காமல் இருக்கமுடியாது. அத்துடன், சேர்க்கப்பட்டிருக்கும் இசையும், துரத்தும் ரோபோவும், நாயின் பயமும் சிரிப்பை வரவழைக்கின்றன.

மேலும் படிக்க | மலைப்பாம்பை உயிருடன் கடித்துக் கொன்ற சின்னஞ்சிறு எறும்புகள்.... அதிர வைக்கும் வைரல் வீடியோ

உண்மையில், நாய் குரைத்தாலே நாம் அச்சத்தில் பின்வாங்குகிறோம். அதேபோலத் தான் ரோபோ நாய் வருவதைப் பார்த்ததும் நாய்க்குட்டிகளுக்கு ஒன்றும் புரியாமல், விநோத ஜந்து என்று நினைத்ததோ என்னவோ தெரியவில்லை பம்மிப் பதுங்குகிறது. ஆனால், விடாது கருப்பு என்று சொல்வது போல, நாய் செல்லும் இடத்திற்கு எல்லாம் ரோபோவும் செல்வதையும், நாய்க்குட்டியோ, ‘தப்பித்தால் தம்பிரான் புண்ணியம்’ என துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடுவதையும் பார்க்கலாம். இந்த வீடியோ பார்த்து ரசிக்க, மகிழ வைக்க அருமையான வீடியோ என்று பலரும் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.

பரபரப்பான இன்றைய உலகத்தில், சமூக ஊடகங்கல் நம் வாழ்வின் அங்கமாகிவிட்டன. சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பலவிதமான தகவல்களை வழங்கி வழங்குகின்றன. நாம் தினசரி பார்க்கும் வீடியோக்கள் மட்டுமல்ல, வித்தியாசமான வீடியோக்களுக்கும் எப்போதுமே ஒரு தனி ஆர்வம் இருந்து வருகின்றது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் முதன்மையானது நாய் என்றால், தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது ரோபோ என்பது மறுக்கமுடியாத உண்மை.

நிஜ நாயும், தொழில்நுட்ப நாய்க்குட்டியும் சந்தித்தால்? துண்டைக்காணோம், துணியைக் காணோம் என ஓடும் நாய் எது? இந்த வைரல் வீடியோவை பார்த்தால் புரியும்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

மேலும் படிக்க | போனில் மூழ்கிய சிறுவன்! உள்ளே நுழைந்த பாம்பு! அடுத்து என்ன நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News