குளிருக்கு இதமாய் குளிர் காயும் குட்டி நாய்கள்! நெருப்பு மூட்டியவருக்கு குவியும் பாராட்டுகள்

Dogs Bonfire Video Viral: நாய்க்குட்டிகள் குளிர் காயும் அழகான வீடியோ வைரலாகிறது. கருணை உள்ளத்துடன், தெரு நாய்கள் மீது அக்கறை காட்டியவருக்கு பாராட்டுக்கள்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 21, 2023, 10:31 PM IST
  • கடும் குளிரில் ஜாலி செய்யும் குட்டீஸ்
  • குளிர் காயும் நாய்க்குட்டிகள்
  • நாய்க்குட்டிகள் குளிர் காயும் அழகான வீடியோ வைரல்
குளிருக்கு இதமாய் குளிர் காயும் குட்டி நாய்கள்! நெருப்பு மூட்டியவருக்கு குவியும் பாராட்டுகள் title=

நாய்க்குட்டிகள் வீடியோ: சமூக ஊடகங்களில், விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகின்றன. அதிலும் வேடிக்கையான, தனித்துவமான வீடியோக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ஆச்ர்யத்தில் ஆழ்த்தும் என்றால், பல வீடியோக்கள் உணர்ச்சிவசப் படுத்தும். வேறு சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும், பல மனிதாபிமானம் இல்லையா என்ற கேள்வி கேட்க வைக்கும் என்றால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ மனிதர்களிடம் இன்னும் கருணை உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை காட்டுகிறது.

குளிரில் நாய் குட்டிகள் 

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோவில் நாய் குட்டிகள் குளிர் காய்வதைக் காணலாம். குளிரில் நடுங்கும் நாய்க் குட்டிகளை பார்த்த கருணை மனம் படைத்த யாரோ ஒருவர்,  நாய்கள் குளிர் காய்வதற்கு வசதியாக நெருப்பு மூட்டியிருக்கிறார். நாய் குட்டிகள் நெருப்பின் அருகே அமர்ந்து, கடும் குளிரில் குளிர் காயும் வீடிய மனதை நெகிழ்விக்கிறது.

வைரல் வீடியோவை பார்த்து ரசிக்கலாம்...

டிசம்பர் மாதத்தில் வட இந்தியாவில் குளிரால் அனைவரும் நடுங்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் தெருவில் சுற்றித் திரியும் விலங்குகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். அதில் சில நாய்க் குட்டிகள் குளிரால் நடுங்குவதை பார்த்து, மனிதர்கள் குளிர் காய நெருப்பு மூட்டுவது போலவே, நாய்களுக்கும் நெருப்பு மூட்டி கொடுத்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது.

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

கடுமையான குளிர் நிலவும் இந்த சமயத்தில், மனிதர்கள் வீட்டிற்குள் கம்பிளி, ஹீட்டர் என தங்களை சூடு படுத்திக் கொண்டால், தெருவில் உள்ள விலங்குகளுக்கும் குளிர் போக்க உதவி செய்திருக்கும் மனிதர்களுக்கு தெருவில் வசிக்கும் விலங்குகள் கண்டிப்பாக நன்றி சொல்லும். பல நேரங்களில் விலங்குகள் குளிரைத் தாங்க முடியாமல் உயிரை இழக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குளிரை சமாளிக்க நாம் தயாராகிவிட்டாலும், தெரு நாய்கள் ஒவ்வொரு நாளும் குளிரை அனுபவித்து வருகின்றன. பூமியின் சக குடிமக்களான விலங்குகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள முடியாதவை. அவற்றைக் காப்பது நமது பொறுப்பு.

சாலைகளிலும், வீட்டிற்கு அருகாமையில் நாம் காணும் தெருநாய்கள் மீது ஒரு சிந்தனையும் பரிவும் இருந்தால் போதும். தயவுசெய்து அவற்றை உங்கள் வீட்டு வளாகத்திற்குள் அனுமதித்து, உணவு கொடுங்கள். இரவில் குளிரில் சாலையில் தங்குவது நீங்கள் கற்பனை செய்வதை விட கடினமாக இருக்கும்.

நள்ளிரவுக்குப் பிறகு வெப்பநிலை கடுமையாகக் குறைகிறது, நாய்கள் தூங்குவதற்கு ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பது கொடுப்பது அவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயமாக இருக்கும். அவர்கள் உறங்கக்கூடிய சில அட்டைப்பெட்டிகள் அல்லது பாய்களை ஏற்பாடு செய்து கொடுங்கள். கடுமையான குளிர் நிலவும் சூழ்நிலையில், நாய்க் குட்டிகள் குளிர் காய தீ மூட்டியவர் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர் தான்.

மேலும் படிக்க | அருவியில குளிக்கும்போது எச்சரிக்கை அவசியம்! நொடியில் மாறிய தலைவிதி! சோக வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News