ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற IPL தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டு இடைகால தடை விதிக்கப்பட்டது. கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை அணி இந்த முறை களமிறங்குகின்றன. இதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
அதுவும் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும் முதல் ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிவீரர்கள் அனைவரும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஆப் வெளியாகியுள்ளது. அந்த ஆப்பை ரவிந்திர ஜடேஜா தொடங்கி வைத்தார்.
CSK app என்று பெயரிடப்பட்டுள்ள அதில், ரசிகர்கள் சென்னை அணியின் ஜெர்சி உள்ளிட்ட மெர்சன்டைஸ்களையும், போட்டிகளுக்கான டிக்கெட்களையும் பெற முடியும். இந்த ஆப் கடந்த திங்கள்கிழமை வெளியானது. வெளியாகி இதுவரை சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.