நிம்மதியா தூங்க விட்றானா பாரு...நாயிடம் உரண்டை இழுக்கும் பூனை!

குறும்புக்கார பூனை ஒன்று சோஃபா மீது படுத்திருக்கும் நாயை தூங்கவிடாமல் தொல்லை கொடுக்கும் காட்சி இணையத்தில் பகிரப்பட்டு பலரையும் கவர்ந்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 7, 2022, 01:44 PM IST
  • சோபாவில் அமைதியாக தூங்கும் நாய்.
  • நாய்யிடம் வம்பிழுத்து விளையாடும் பூனை.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
நிம்மதியா தூங்க விட்றானா பாரு...நாயிடம் உரண்டை இழுக்கும் பூனை!  title=

நாம் வீட்டில் வளர்க்கும் வெவ்வேறு வகையான பிராணிகள் சில நேரம் சண்டையிட்டு கொண்டாலும் பல நேரங்களில் அன்பு பாராட்டி கொள்ளுகின்றன.  சில சமயம் அவை குறும்புத்தனம் செய்து அனைவரையும் மகிழ்வித்து ரசிக்க வைக்கின்றன, இதுபோன்ற அதிகமான செயல்களில் ஈடுபடுவது பூனைகளும், நாய்களும் தான்.  இந்த இரண்டு வகையான பிராணிகளும் தான் அடிக்கடி ஏதேனும் குறும்பை செய்து இணையத்தை ஆக்கிரமித்து கொள்கிறது.  பூனையும், நாயும் கண்ணமூச்சி விளையாடும் காட்சி, நாற்காலிக்கு அடித்துக்கொள்ளும் காட்சி போன்ற பல நகைச்சுவையான காட்சிகளை கண்டு ரசித்திருக்கும் நமக்கு மேலும் பூனை-நாய் காம்போவில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

cat

மேலும் படிக்க | வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா ஆனா அதுக்குன்னு இப்படியா

ட்விட்டரில் ஃபிகன் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த க்யூட்டான வீடியோ பகிரப்பட்டுள்ளது.  அந்த வைரலாக வீடியோவில் நாய் ஒன்று சோஃபாவின் மீது படுத்து கொண்டிருப்பதையும், அதனருகில் கீழே தரை பகுதியில் பூனை ஒன்று படுத்து கொண்டிருப்பதையும் காண முடிகிறது.  அசதியாக உறங்கி கொண்டிருக்கும் அந்த நாயை, கீழே படுத்திருக்கும் பூனை மெதுவாக எழுந்து அதன் கால்களை தட்டுகிறது.  திடீரென்று வெகுண்டெழுந்த அந்த நாய் தன்னை யார் எழுப்பியது என்று சுற்றும் முற்றும் குழப்பத்துடன் பார்க்கிறது.  அந்த குறும்புக்கார பூனையோ ஒன்றும் தெரியாதது போல அமைதியா கீழே படுத்து கொள்கிறது.

 

இணையத்தில் வைரலாகியுள்ள இந்த வீடியோவை பல்லாயிரகணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  இது அனைவரையும் சிரிக்கவைக்கும் விதமாக அமைந்துள்ளது, இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் பலரும் சிரிப்பு எமோஜிகளை கமெண்ட் செக்ஷனில் நிரப்பி வருகின்றனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு இதுவரை பதினாறாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது.

மேலும் படிக்க | பாதாம் சாப்பிடும் அணிலின் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News