கிளியை பிடிக்க போய் பம்மிய பூனை: வைரல் வீடியோ, பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது

Funny Viral Video: கிளி சந்தேகத்திற்கிடமாக அதைப் பார்க்கும்போது பூனை வேடிக்கையாக சுவர்களுடன் விளையாடுவது போல் பாசாங்கு செய்வது பார்ப்பதற்கு மிகவும் சிரிப்பை வரவழைக்கிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 8, 2022, 12:51 PM IST
  • சமீபத்திய நாட்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
  • அப்படி ஒரு வீடியோ இப்போது இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.
  • மிகவும் வேடிக்கையாக இருக்கும் இந்த வீடியோவுக்கு 10.4 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் 327k லைக்குகளும் கிடைத்துள்ளன.
கிளியை பிடிக்க போய் பம்மிய பூனை: வைரல் வீடியோ, பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது title=

சமூக வலைத்தளங்கள் இன்று நம் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன. நமது கவலைகளை மறந்து நம்மை இவை வேறு ஒரு உலகுக்கு அழைத்துச் செல்கின்றன. இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமீபத்திய நாட்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. அப்படி ஒரு வீடியோ இப்போது இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. 

பூனைகள் அபிமான செல்லப் பிராணிகள். ஆனால் அவை தந்திரமானவையும் கூட. இவை வீட்டு சூழலில் பரிவோடும் அன்போடு வளர்க்கப்பட்டாலும், சில சமயம் இவற்றின் வேட்டையாடும் உள்ளுணர்வும் வெளிவருவதுண்டு. 

மேலும் படிக்க | பசுவுக்கு அடித்த ஷாக், பாய்ந்துவந்து காப்பாற்றிய நிஜ ஹீரோ: வீடியோ வைரல் 

இப்போது இணையத்தில் ஒரு வேடிக்கையான வீடியோ வைரல் ஆகி வருகிறது. அழகான மற்றும் வேடிக்கையான விலங்கு வீடியோக்களை தவறாமல் பகிர்ந்து கொள்ளும் 'buitengebieden' பக்கத்தில்தான் இந்த வீடியோவும் பகிரப்பட்டது. மிகவும் வேடிக்கையாக இருக்கும் இந்த வீடியோவுக்கு 10.4 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் 327k லைக்குகளும் கிடைத்துள்ளன. 

வைரலான இந்த வீடியோவில், ஒரு வெள்ளை செல்லப் பூனை தரையில் சுற்றித் திரிவதைக் காண முடிகின்றது. ஒரு படுக்கையின் மேல் அமர்ந்திருக்கும் பச்சைக் கிளியைப் பிடிக்க பூனை முயல்வதையும் வீடியோவில் காண முடிகின்றது. கிளிக்கு தெரியாமல் அதை பிடிக்க முயலும் பூனை மெதுவாக நகர்கிறது. ஆனால் கிளி பூனையின் எண்ணத்தை தெரிந்துகொண்டு விடுகிறது. கிளி தன்னை பார்த்துவிட்டதை அறிந்துகொண்ட பூனை, பின்னர் கிளியை தாக்கும் எண்ணமே தனக்கு இல்லை என்பது போலவும், சுவர்களை நோட்டமிடுவது போலவும் பாசாங்கு செய்கிறது. இது பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. 

கிளி சந்தேகத்திற்கிடமாக அதைப் பார்க்கும்போது பூனை வேடிக்கையாக சுவர்களுடன் விளையாடுவது போல் பாசாங்கு செய்வது பார்ப்பதற்கு மிகவும் சிரிப்பை வரவழைக்கிறது. “சுவர்களைத்தான் பார்க்கிறேன்..." என்று பூனை சொல்வது போல் வீடியோ கேப்ஷனில் எழுதப்பட்டுள்ளது. 

ட்விட்டர் பயனர்கள் வீடியோவைப் பார்த்த பிறகு வெறித்தனமாக சிரித்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்து தங்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை என்றும், பூனை பம்முவதைப் பார்க்க மிகவும் வேடிக்கையாக உள்ளது என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

கிளியிடம் பம்மும் பூனையின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

மேலும் படிக்க | குழந்தைக்கு தாயை போல பாசமாக மிட்டாய் கொடுக்கும் பூனைக்குட்டியின் க்யூட் வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News