மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர், பாரதிய ஜனதா எம்.பி. ஹேமமாலினி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தை சுத்தம் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற வளாகத்தை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், எம்.பி. ஹேமமாலினி ஆகியோர் பங்கேற்று சுத்தம் செய்தனர். பாஜக கட்சியைச் சேர்ந்த மேலும் சில எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த குப்பைகளைப் பெருக்கி சுத்தம் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. ஹேமமாலினி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தை சுத்தம் செய்யும் பணியை துவங்கியுள்ளோம். இந்த முயற்சியை நாடாளுமன்ற சபாநாயகர் பாராட்டியுள்ளார். அடுத்த வாரம் எனது தொகுதியான மதுராவுக்கு செல்கிறேன். அங்கும் தூய்மை திட்டத்தை மேற்கொள்ள இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
BJP MP Hema Malini: It is highly appreciable that the Speaker of the House took initiative to carry out 'Swachh Bharat Abhiyan' on the 150th birth anniversary of Mahatma Gandhi, in Parliament premises. I will go back to Mathura next week and carry out this Abhiyan there as well. pic.twitter.com/86x5jX7TKE
— ANI (@ANI) July 13, 2019
முன்னதாக, மக்களவை தேர்தலில் மதுரா தொகுதியில் இருந்து போட்டியிட்ட ஹேமா மாலினி வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களுடன் சேர்ந்து, கதிர் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டார். பின்னர் அவர்களிடம் தனக்கு ஓட்டளிக்கும்படி பிரசாரம் மேற்கொண்டார். ஹேமா மாலினியின் இந்த செயல்பாடு நாடு மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் தூய்மை இந்தியா திட்டத்தை கையில் எடுத்து நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.