நடிகை எமி ஜாக்சன் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!
நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்சிகரமான புகைப்படத்தை வெளியிதுவதும், பரபரப்பை ஏற்படுத்துவதும் வழக்கமாகிவிட்டது. முதலில் இந்த பழக்கத்தை பாலிவுட் பிரபலங்கள் மட்டும்தான் இந்த யுக்தியினை கையாண்டு வந்தனர். இப்போது அந்த தாக்கம் தென்னிந்திய சினிமா நடிகைகளிடமும் வந்துவிட்டது.
நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். தமிழ் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.
இவரது நடிப்பபில் உறுவாகி தற்போது வெளிவர காத்திருக்கும் திரைப்படம் 2.0. இப்படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்து வரும் நிலையில் படத்தின் நாயகி எமி ஜாக்சன் தனது கவர்சிகரமான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றார்.
Back in training with the best in the biz @Bradley_Simmo ! ym courtesy of @TheMayFairHotel pic.twitter.com/o0GUX2uq77
— Amy Jackson (@iamAmyJackson) August 9, 2018
சமீபத்தில் இவர் தன் காதலருடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு மீண்டும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். இந்நிலையில் இவர் தற்போது தனது உடற்பயிற்சி வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
கட்டுடல் எனப்படும் 6 பேக் அமைப்பினை மீட்டு கொண்டுவர மீண்டும் தீவில உடற்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளதாக இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.