Obama இனி உங்கள் பெயர் Sudhama - யோகியை திணறடிக்கும் #memes!

அலகாபாத் நகரின் பெயரினை பிரயாக்ராஜ் என மாற்றவுள்ளதாக உபி முதல்வர் அறிவித்த நிலையில், தற்போது யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்களை வைத்து நெட்டீசன்கள் மீம்ஸ் திருவிழா நடத்தி வருகின்றனர்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 19, 2018, 04:56 PM IST
Obama இனி உங்கள் பெயர் Sudhama - யோகியை திணறடிக்கும் #memes! title=

அலகாபாத் நகரின் பெயரினை பிரயாக்ராஜ் என மாற்றவுள்ளதாக உபி முதல்வர் அறிவித்த நிலையில், தற்போது யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்களை வைத்து நெட்டீசன்கள் மீம்ஸ் திருவிழா நடத்தி வருகின்றனர்!

உத்தரபிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற அலகாபாத் நகரின் பெயரினை பிரயாக்ராஜ் என மாற்றுவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது. பிரயாக்ராஜ் என்பது புரணாங்களில் குறிப்பிடப்படும் பிரசிதிப்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும். அலகாபாத்தை பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாகவே கோரிக்கை இருந்துவந்த நிலையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள கும்பமேளாவின் போது பெயரை மாற்றப்படும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது யோகி ஆதித்யநாத் உலக பிரபலங்கள் பலருக்கும் பெயரினை மாற்றி வைப்பது போல் இணையத்தில் நெட்டீஸன்கள் விமர்சித்து வருகின்றனர்...

அடுத்தாண்டு உத்திரபிரதேசத்தில் நடைபெறவுள்ள அலாகபாத் கும்ப மேளா வேலைகள் மும்மரமாக நடைப்பெற்று வருகிறது. கும்ப மேளாவின் போது அலகாபாத் நகரின் பெயர் பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது நவம்பவர் 30-ஆம் நாளுக்குள் கும்ப மேளாவிற்கான வேலைகள் முடிவடையும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Trending News